உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, October 31, 2011

"மாங்கோ'




விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.

ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன

Sunday, October 30, 2011

 இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடுராணுவ பயன்பாடு, 
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில்அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. 
இந்த சம்பவம்
 நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. 
Description: http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300313_246484118719774_100000745631208_784688_6736633_a.jpg 
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்துகிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்லஉலகையே மிரள வைத்தது. 
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்  ஸ்தம்பித்துவிடுகின்றன.       
அப்படி
 நிகழ்வதற்கு என்ன காரணம் ??? 
ஒவ்வொரு
 நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீதுவிழுந்துகொண்டே இருக்கிறது. 
இரண்டரை வருடங்களுக்கு
 ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. 
இதில்குறிபிடத்தக்க
 அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்தலம் என்றுபோற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் 
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது." 
   
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. 
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். 
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே 
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! 
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
 
 Description:
 http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300253_246484692053050_100000745631208_784691_4297693_a.jpg
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள்பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்துஇந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்... 
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட 
கில்லாடிகள் !!!!
 
எப்படியா ?? 
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் 
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
 
நமக்கு மேலே ஒருவன்.... 

Wednesday, October 26, 2011

1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larry Page, Sergey Brin இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரம் Backrub. இதுவே 1998ஆம் ஆண்டு கூகுள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை இணையத்தில் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறி உள்ளது. இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கூகுள் நிறுவனத்தை பற்றி. உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பும் அளவுக்கு ஒரு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாள் இந்த தளம் செயல்படவில்லை எனில் இணையத்தின் செயல்பாடே முடங்கி விடும் அளவிற்கு பல கிளை தளங்களை தன்னுள் வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
Related Posts Plugin for WordPress, Blogger...