உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, November 23, 2011

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5] Thanks to Abdul Basith
ப்ளாக் ஒன்றை நாம் உருவாக்கியப் பின் மற்றவர்களிடம் அதனை அறிமுகப்படுத்துவதற்கு முன் ப்ளாக்கர் பற்றி நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். ப்ளாக்கரில் உள்ள அமைவுகளைப் பற்றி இனி பார்ப்போம்.

ப்ளாக்கர்  முகப்பு பக்கத்தில் (டாஷ்போர்டில்) நாம் உருவாக்கிய ப்ளாக்கின் அமைவுகள் பின்வருமாறு இருக்கும்.ப்ளாக்கின் பெயருக்கு கீழே,

நமது ப்ளாக்கின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? (Pageviews)

எத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது? (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)

எத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள்? என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அதே  பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்.


  - புதிய பதிவு எழுதுவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.

  - நமது ப்ளாக்கை பார்க்க இதனை க்ளிக் செய்யுங்கள்.

  -இந்த பட்டனில் இடது புறம் க்ளிக் செய்தால் அனைத்து பதிவுகளும் இருக்கும் All Posts பகுதிக்கு செல்லலாம். வலது புறம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.


இதை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Overview:


Overview என்பதை க்ளிக் செய்தால் நமது ப்ளாக் பற்றிய விவரங்களை மேலோட்டமாக காட்டும்.

Pageviews:

நமது  ப்ளாக்கின் பக்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்பதை சிறிய விளக்கப்படமாகக் காட்டும். அதற்கு கீழே அதிகமான வாசகர்களை நமது தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் மூன்று தளங்களைக் காட்டும்.

Updates:

நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள், பிரசுரித்த பின்னூட்டங்கள், இன்று நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்டவைகள், மொத்தப் பதிவுகள், நமது ப்ளாக்கை பின்தொடற்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை காட்டும்.

News from Blogger: 

ப்ளாக்கரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் பற்றியும், புதிய செய்திகளைப் பற்றியும் http://buzz.blogger.com/ என்ற ப்ளாக்கில் ப்ளாக்கர் தளம் பதிவிட்டு வருகிறது. அதில் பதியப்பட்ட சமீபத்திய பதிவுகளை இங்கு காட்டும்.


Recent Blogs of Note:

சிறந்த ஆங்கில ப்ளாக்கர் தளங்களை தினமும் http://blogsofnote.blogspot.com/ என்ற தளத்தில் ப்ளாக்கர் தளம் பகிர்கிறது. அவற்றை இங்கு காட்டும்.


Blogger Guide:

பதிவர்களுக்கு பயன்படும் வகையில் சில உதவிக் குறிப்புகளை இங்கு காட்டும். அந்த இணைப்புகளை சொடுக்கி தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...