உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 18, 2011

புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? (சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்)


கடந்த ஒரு வாரமாய் டிவி நியூஸ் சேனல் பார்க்கும் எல்லாரிடமும் இந்த கேள்வி ஓடிக் கொண்டுதானிருந்தது. அதெப்படி ஆரம்பித்த சில மாதங்களுக்குள் இந்த நிலைக்கு வர முடியும்? என்ன தான் நிகழ்ச்சிகள் நன்றாய் இருந்தாலும் கூட இன்று வரை சன் க்ரூப் சேனல்களை தவிர மற்ற சேனல்கள் நம்பர்.1 பொஷிஷனுக்கு வந்ததேயில்லை. தூரதர்ஷன் காலத்திற்கு பின் ஆரம்பித்த சன்னின் ராஜ்ஜியம் இன்று இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது எதனால்? நிஜமாகவே புதிய தலைமுறை செய்திகள் நடுநிலையோடு, சிறந்த முறையில் கொடுக்கிறார்களா? இல்லை வேறு ஏதாவது பின்னணி உள்ளதா? இந்த கருத்து கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

புதிய தலைமுறை சேனல் ஆரம்பித்து அறுபது நாட்களுக்குள் ஏ.சி. நீல்சன் எடுத்த கருத்து கணிப்பில் மொத்த ஜி.ஆர்.பியில் 35.94 புள்ளியை பெற்றிருப்பது நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். சன் செய்திகள் 31.24 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலேயும், மூன்றாவது இடத்தில் கலைஞர் செய்திகளும், நான்காவது இடத்தில் ராஜ் நியூஸும், ஐந்தாவது இடத்தில் என்.டி.டிவி ஹிண்டு இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பின்னால் தான் ஜெயா செய்திகள் என்பது வேறு விஷயம். இதெப்படி சாத்தியம்? தமிழக சாட்டிலைட் உலக வரலாற்றில் முதல் முறையாய் ஒரு சேனல் சன்னை முந்தியிருக்கிறது. இது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, சந்தோஷப்பட வேண்டிய ஒன்று.

புதிய தலைமுறை சேனல் ஆரம்பித்ததிலிருந்து தங்களை ஒரு நடுநிலையான செய்திகளைத் தரும் சேனல் என்று பிரகடனபடுத்தி வந்தது. அது மட்டுமில்லாமல் தமிழின் முதல் HD சேனலும் கூட. அதற்கேற்றார் போல தங்கள் நிகழ்ச்சிகளையும் வடிவமைத்து, தமிழகத்தின் சின்ன சின்ன நிகழ்வுகளைக் கூட விடாமல் கவர் செய்து மக்கள் மனதை கவர் செய்துவிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சில விஷயஙக்ளில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சில சார்ப்பு விஷயங்களை தந்தாலும் சுவாரஸ்யமாய் தர முயற்சிக்கிறார்கள். கொஞ்சம் ப்ரெஷ்ஷாக இருக்கவும் செய்கிறது. முக்கியமாய் ஒரே அரசியல் கட்சியை ஆதரித்து இவர்கள் செய்திகளை போடுவதில்லை. அது மட்டுமில்லாமல் தமிழத்தின் மூலை முடுக்கில் எல்லாம் போய் செய்திகளை சேகரித்து ஒளிபரப்புவது என்பதை சிறப்பாகவே செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ரயில் விபத்து நிகழ்வில் முதலில் போய் நின்று செய்திகளை கொடுத்தவர்கள் இவர்கள் தான் என்பது செய்தி டிவி உலகில் ஒரு போட்டி நிலையை உருவாக்க காரணமாய் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயமே. வழக்கமாய் ஓபி வேன் மூலமாய் நிகழ்வுகளை லைவாகவும் உடனடியாகவும் ஒளிபரப்பும் முறை மட்டுமில்லாமல் கேமராவுடன் சேர்ந்த 3ஜி இண்ட்ர்நெட் டெக்னாலஜியின் மூலம் படம்பிடிக்கப்பட்டவுடனேயே இண்டர்நெட் மூலம் விஷுவல்களை அப்லோட் செய்யும் வசதியும் இவர்களிடத்தில் இருக்கிறது. ஆனால் இத்தனையும் மீறி அறுபது நாட்களில் ஒரு செய்தி சேனல் இந்நிலையை அடைய முடியுமா? என்ற கேள்வி இருந்து கொண்டேத்தான் இருக்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை இவர்களின் வரவுக்கு முன் பெரும்பாலும் அரசியல் கட்சிகள் தான் டிவி சேனலை நடந்தி வந்ததால் சார்புடைய செய்திகளாகவே வெளியிட்டு வந்தது. இல்லை சார்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தது. எனவே.. ஒரு செய்தியை சன், கலைஞர், ராஜ், மக்கள், என்று நான்கு விதமாய் பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். இவர்கள் ஏற்படுத்திய சலசலப்புக்கு ஈடாக சில பல வருடங்களுக்கு முன்னால் விஜய் டிவி தன் நியூஸ் நேரத்தை என்.டி.டிவியுடன் சேர்ந்து ஆரம்பிக்க, ஆடிப் போனது சன். உடனடியாய் தன் பவரை வைத்து என்.டி.டிவியை ஆல்மோஸ்ட் தனியாய் கூப்பிட்டு பேசி, விஜய் டிவியின் லைசென்ஸ் ப்ரச்சனை என்று சொல்லி அதை உடனடியாய் ஆஃப் செய்தார்கள். அது மட்டுமில்லாமல் இதன் நடுவே இன்று சன் நியூஸில் பேசிக் கொண்டிருகும் பல பேர் விஜய் டிவியில் செய்தி பிரிவில் இருந்தவர்கள் தான். அதே போல் தான் ராஜ் நியூஸும். இவர்களும் தங்களை நடு நிலை சேனல் என்று சொல்லிக் கொண்டுதான் ஆட்டத்தில் இறங்கினார்கள் இவர்களுக்கு இவர்களே ப்ரச்சனை. காசை செலவு பண்ணாமல் சேனல் நடத்த இன்றைய அளவில் இவர்களை விட்டால் ஆளில்லை. எனவே ஆட்டோமேட்டிக்காக இவர்கள் ஆட்டத்திலிருந்து விலக இருக்கிற நியூஸ் சேனல்களில் கமர்ஷியலாய் செய்திகளை கொடுத்ததும், முக்கியமாய் எலலா இடங்களிலும் தஙள் சேனல் தெரியும் படியாக இருந்ததாலும், ஏற்கனவே சன்னிற்கு இருக்கும் மார்கெட்டும் அவர்களுக்கு உதவ, சன்னும் அவர்கள் சார்ந்த சேனலும் நம்பர்.1ல் ஓடிக் கொண்டிருந்தது. இவர்கள் காலத்தில் யாரும் நியூஸ் சேனல் ஆரம்பிக்க முடியாதபடி சிறப்பாக தன் பதவியை உபயோகித்த சிறந்த அமைச்சர்களில் ஒருவர் தயாநிதி மாறன் அவர்கள். இவர்களின் பிடி விலகியதும் ஏற்கனவே நியூஸ் சேனல் ஆரம்பிக்க ஆசைப்பட்டவர்கள் எல்லோரும் ஆட்டத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார்கள். அந்த வகையில் புதிதாய் சத்யம், நியூஸ் +, போன்ற சேனல்கள் வர ஆரம்பித்து விட்டது. இன்னும் சோனி, டிவி9, டிவி16, ஸ்டார் எல்லாம் ஆட்டத்தில் இறங்க யோசித்துக் கொண்டிருக்கிறது.

சரி இவ்வளவு விஷயங்களுக்கும் புதிய தலைமுறை முதலிடம் வந்ததற்கும், அதன் பின்னணி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? அதற்கு என்ன சம்பந்தம் என்றால் கேட்பது எனக்கு புரிகிறது. இருக்கிறது. எல்லாவற்றிக்கும் காரணம் அரசு கேபிள். தமிழகம் முழுவதும் சன்னின் சுமங்கலி கேபிள் விஷனின் ஆதிக்கத்தை உடைக்க, ஆரம்பிக்கப் பட்ட அரசு கேபிளில் சன் நெட்வொர்க் சேனல்களில் சன் மட்டுமே கடந்த மூன்று மாதங்களாய் வந்து கொண்டிருப்பது தான் அதன் காரணம். அரசு கேபிள் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை சன் தன் சேனல்களை அரசு கேபிளுக்கு கொடுக்கவேயில்லை. இன்னமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாய் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அது ஏன் வரவில்லை என்பது தமிழக அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க, சன் டிவி இல்லாமல் கேபிள் டிவி தொழில் நடத்த முடியாது என்கிற நிலையில் அரசு கேபிள் ஆட்டம் கண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் சன் இல்லாமல் கேபிள் டிவி என்பது தவிர்க்க முடியாது ஒன்று. இதை சில பேர்  மறுக்கலாம் ஆனால் நிஜம் அதுதான். முதலில் யாரும் சன் டிவி கொடுக்கக் கூடாது என்று தான் வலியுறுத்தப் பட்டனர். ஆனால் வேறு வழியில்லாமல் சன் டைரக்ட் மூலமாகவொ, அல்லது மற்ற டிடிஎச் மூலமாகவோ சன்னின் சிக்னலை எடுத்து டிமாடுலேட் செய்து தான் தமிழகம் முழுவதும் சன் இன்று அரசு கேபிளில் தெரிகிறது இதை அரசும் எதிர்க்கவில்லை, சன்னும் எதிர்க்கவில்லை. அரசு எதிர்த்தால் மீண்டும் நெட்வொர்க்கில் ப்ரசனை வரும். சன் எதிர்த்தால் தன் பே சேனல் வருமானமாய் கிடைக்கும் ஒரு சில கோடிகளின் இழப்பை பார்த்தால் தமிழகத்தில் சன் என்கிற சேனலே இல்லாமல் போய் அவர்கள் நெட்வொர்க்கின் நாநூறு கோடி ரூபாய் வருமானம் போய் விடும். எனவே அவர்களும் கமுக்கமாய் தங்களுடய முதன்மை சேனலுக்கு ஏதும் பாதிப்பு வராத வரை ப்ரச்சனையில்லை என்று அமுக்கி வாசிக்கிறார்கள்.

ஸோ.. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் புதிய தலைமுறை எப்படி முதலிடத்திற்கு வந்தது என்று. நிச்சயமாய் புதிய தலைமுறை சேனலை பற்றி குறைவாக சொல்ல நான் இதை எழுதவில்லை. தமிழில் சமீபகாலமாய் நான் பார்க்கும் ஒரே செய்தி சேனல் புதிய தலைமுறைதான். என்றாலும் இது எப்படி சாத்தியப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இத்துறையில் இருப்பதினால் எனக்கு உண்டு. சன் நியூஸ் எனும் ஒரு சேனல் தமிழக கேபிள் நெட்வொர்க்கிலேயே இல்லாத போது, தமிழகம் எங்கும் புதியதாய் நல்ல பப்ளிசிட்டியோடு ஆரம்பிக்கப்பட்ட புதிய தலைமுறை சேனல் முதலிடம் வருவதில் என்ன ஆச்சர்யம்?. ஆனால் எனக்கு இந்த ரேட்டிங்கில் உள்ள சந்தேகம் என்னவென்றால் எல்லா நெட்வொர்க்குகளில் வரும் சேனல் முதலிடம், பெரும்பாலான நெட்வொர்க்கில் வராத சன் நியூஸ் இரண்டாவது இடம் என்பதில் தான். அடுத்த முறை இவர்களுடய ரேட்டிங்கின் போது சன் நெட்வொர்க் சுத்தமாக இல்லை என்ற நிலையில் இருந்தால் நிச்சயம் பெரிய வித்யாசம் இருக்க வேண்டும். விரைவில் அது பற்றிய செய்திகளூடன் வருகிறேன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...