உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, November 23, 2011

பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதிநமது இடுகைகளை வாசகர்களுக்கு பிடிஎப் கோப்பாக வழங்குவது மூலம் நமது எழுத்துக்களை மேலும் சிலரிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனை உங்கள் வலைப்பதிவில் நிறுவுவது எப்படி? என்பதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

வாசிப்பவருக்கு ஓர் இடுகை பிடித்துப் போனால் அந்த இடுகையை தனது கணினியில் வாசிப்பிற்காக சேமித்து கொள்ள விரும்புவார். இணைய உலாவிகளில் இணையப் பக்கத்தை சேமிக்கும் போது இணைய பக்கம் தனியாகவும், அதில் உள்ள படங்கள் தனியாகவும் சேமிக்கப்படும். இடுகைப் பக்கத்தின் பல பகுதிகள் முழுமையாக சேமிக்கப்படாது. இப்படி சேமிக்கப்பட்ட HTML பக்கங்களை அவர் இணைய இணைப்பு இல்லாத ஒரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளுவது சற்றே சிக்கலான விஷயம்.

இதற்கு பதிலாக நமது இடுகைப் பக்கத்தை ஒரே கோப்பாக PDF வடிவில் கொடுத்தால் அவருக்கு எளிமையாக இருக்கும். அந்த கோப்பை அவர் மற்றவருடன் பகிர்வதன் மூலம் உங்கள் இடுகை பலரை சென்றடையும். இணைய பரிச்சயம் இல்லாதவர் கூட உங்கள் இடுகைக்கான PDF கோப்பை வாசித்து கொள்ள முடியும்.

இணையப்பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிப்பது பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். படிக்கவும். அதன் மூலம் எந்த இணையப் பக்கத்தையும் கணினியில் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். உங்கள் பதிவுக்கு வரும் அனைவரும் இந்த வசதி பற்றி அறிந்து இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

அதனால் உங்கள் பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதியை அளித்து விட்டால் உங்கள் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். நமது இந்த TVS50 வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் 'தொடர்புள்ள இடுகைகள்' பகுதிக்கு கீழே பாருங்கள்.  'Download As PDF' என்ற வசதி இருக்கும்.


உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில் இந்த வசதியை கொண்டு வர உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலில் சில வரிகளை சேர்த்தால் போதுமானது. உங்கள் பிளாகரின் டாஷ்போர்டு சென்று Layout --> Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள். தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கிடைக்கும் வார்ப்புரு நிரலில் <data:post.body/> என்ற வார்த்தையை தேடுங்கள். அதன் கீழே, கீழ்காணும் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<a expr:href='&quot;http://pdfmyurl.com?url=&quot; + data:post.url'>Download As PDF</a>


இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள். வேலை முடிந்தது.

இனி உங்கள் ஒவ்வொரு இடுகையின் கீழேயும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF' என்ற சுட்டியாக வழங்கப்பட்டு இருக்கும். அந்த சுட்டியை கிளிக் செய்யும் போது உங்கள் இடுகைப்பக்கம் பிடிஎப் கோப்பாக கணினியில் தரவிறக்கப்படும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...