உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 18, 2011

இந்தியாவின் அணு மோகமும் தொடரும் தேனிலவும்...
  
டந்த ஐம்பது ஆண்டு காலமாக இந்திய  அறிவியல்  மற்றும்  தொழில்  நுட்ப  துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பாகத்தை முழுதாய் விழுங்கிக்கொண்டு இத்தனை   நாட்கள்  நம்  அணு  சக்தி  துறை  சாதித்தது   மிகப்பெரிய பூஜ்ஜியம் மட்டுமே.


ன்யாகுமரியில் கந்தன் ஒரு வேளையாவது தினம் சாப்பிட்டானோ இல்லையோ...காஸ்மீரில் எட்டு வயது காசிம் பள்ளிக்கு  சென்றானோ இல்லையோ நம் அணு சக்தி துறைக்கு மட்டும் முதலில் கிடைக்கும் பிளான்க் செக்... அறுபதுகளில் ஆரம்பித்த இந்த கண்மூடித்தனமான ஆதரவு...முதலில் என்னவென்று கேட்க தெரியாத அரசியல்வாதிகளின் ஆதரவோடு...இப்போது என்னைக்கேள்வி கேட்பதா என்ற நிலையில் உள்ளவர் ஆதரவோடு...
  

வர்களுக்கு  கடந்த வருடம் நேரடியாக ஒதுக்கப்பட்டது 75000000000 ( 75  பில்லியன்).சாதித்தது வெறும் 3 சதவீதம் மின்சாரம்.நமக்கு தேவையான மின்சாரத்தில் மூன்று சதவீதம்மட்டுமே இவர்களது ஐம்பது வருட சாதனை...ஐம்பது வருடங்களாய் இத்தனை கோடிகளை விழுங்கியவர்கள் சாதனை இதுதான்... அதையும் தாண்டி  மிகவும் கேவலமான விஷயம் நம் மின்சார  தேவையின் முப்பது சதவீதம் பூர்த்தி செய்யப்படும் என்று வாக்குறுதி செய்துஇத்தனை  கோடிகளை  ஏப்பம்  விட்டவர்கள்  சாதித்தது வெறும் மூன்று சதவீதம்.
தையே நானோ நீங்களோ பண்ணியிருந்தால் நாம் இந்நேரம் மயிலாப்பூர் கோவில் வாசலில் குடும்பத்தோடு பிச்சை எடுத்துக்கொண்டிருப்போம்...இவர்கள் மட்டும் எப்படி எதையும் செய்யாமல் வெறும் வாக்குறுதியில் மட்டுமே ஐம்பது ஆண்டுகளை கடத்தி உள்ளார்கள். 


அணு மின்சாரம் வாக்குறுதி Vs சாதனை (?)ஆண்டு
வாக்குறுதி
சாதித்தது
தேவை பூர்த்தி சதவீதம்
1980
8,000 MW
600 MW
1.2%
1990
25,000 MW
1,000 MW
2%
2000
45,000 MW
3,800 MW
3%
2050
4,70,000 MW
?
35%என் கேள்விகள்?


Ø  ஐம்பது ஆண்டு காலமாக இவ்வளவு மோசமாய் நடந்து வரும் துறையை  யாருமே தணிக்கை செய்யாதது ஏன்?
Ø  இந்த துறை தேவை தானா?
Ø  இது இந்திய மக்களுக்காக தான் செயல்படுகிறதா?
Ø  இது இவ்வளவு மோசமாக நடந்ததுக்கு என்ன நிவர்த்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
Ø  இந்த 75 பில்லியனைத்தாண்டி மறைமுக சலுகை,மானியம்,நிதி உதவி எத்தனை கோடி?
Ø  ஏன் சூரிய,காற்று,பயோமாஸ் போன்ற மரபு சாரா சக்திதுறைக்கு கண்துடைப்புக்காக வெறும் ஐந்து  பில்லியன்  மட்டும்?
Ø  இந்த முதலீடு உலகை ஏமாற்றி அணு ஆயுத உற்பத்திக்கு நிழலா?
Ø  இந்த முதலீட்டை மற்ற துறைகளில் செய்திருந்தால் எழுபதுகளிலே நாம் வல்லரசாய் மாறி இருக்க மாட்டோமா?


ணுசக்தி துறை (Department of Atomic Energy) நேரடியாக பிரதமர் கீழ் வருவதால் அவர் தான் இதற்க்கு பதில் அளிக்க வேண்டும்...மக்கள் பணத்தை...இந்தியாவின் செல்வங்களை இப்படி அட்டை போல ஐம்பது வருடங்கள் உறிந்து கொண்டிருக்கும் இந்த அணு சக்தி துறையை உடனடியாக தணிக்கை செய்து...நாட்டு மக்களுக்கு முழு விபரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.


அறியாமை தலை விரித்தாடிய காலத்தில் பிறந்த இந்த துறைஇப்படி தொடர்ந்து அட்டையாய் ...அபத்தமாய் இருப்பது  நாம் கற்ற கல்விக்கு  இழுக்கு என்றே எனக்குப்படுகிறது...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...