உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, November 20, 2011

ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்வாவும் கொடுத்திட்டாகளே!

ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்வாவும் கொடுத்திட்டாகளே!


அம்மா ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக என்று கிராமத்து மக்கள் பூரித்துப் போகும்போதே நினைத்தேன்…… அம்மா சமயம் பார்த்து அல்வாவும் கொடுப்பாக என்று!
ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த ஆறு மாதங்களாக, சமச்சீர் கல்வியில் சண்டித்தனம்….. சட்டசபை மாற்றத்தில் தேவையற்ற வேகம்……. அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுதல்…. பரமக்குடிக் கலவரம்…… 13000 பேர் வேலை நீக்கம் என்று…….
“ரொம்ப நல்லவங்க” போல பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்த ஜெயலலிதா, முதல் முறையாக பஸ் கட்டணம், பால் விலைகளைக் கன்னாபின்னா என உயர்த்தி, வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.
போதாக்குறைக்கு மின் கட்டணத்தையும் விரைவில் உயர்த்தப் போவதாக இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார். (இல்லாத மின்சாரத்துக்கு எதுக்கு விலையேற்றம் என்று புரியவில்லை).
ஜெயாவின் சிந்தனை இன்னுமே சீராகவில்லை என்பது போலத்தான் தெரிகிறது.
கட்டிட மாற்றங்கள் அலுத்துப் போனதால், கட்டண மாற்றங்களை ஆரம்பித்துவிட்டார் போல் தெரிகிறது. மாத்துனாத்தானே உயர்நீதிமன்றம் தடை போடுது…… அதனால உயர்த்தலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல…. இப்ப கோர்ட் என்ன பண்ணமுடியும்?

“வெள்ளம் வரும்முன்பே அணை போட வேண்டும். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை எனில், அவை முற்றிலும் செயலற்றுவிடும். அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
(அது சரி…. பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே சாகப்போற கண்டிசன்ல இருக்கிறதால- உடனே ஆக்சிஜன் குடுக்கணும், இல்லாட்டி செத்துப் போய்டும்னு சொல்லிச் சொல்லியே…… எங்கள் ரத்தத்தை உறிஞ்சி, எங்களுக்கும் ஆக்சிஜன் செலுத்தவேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விடுவீங்க போல இருக்கே மேடம்!)
அதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்கு மேலும் ஒரு காமெடி செய்திருக்கிறார் பாருங்கள்….
“பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து செயல்பட வைக்க, மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவிகேட்க முடியும்? தமிழகத்தைச் சீரமைக்க மத்திய அரசு ஓரளவுக்காவது உதவி செய்யும் என்று, ஆறு மாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு, தமிழகத்தை அடியோடு புறக்கணித்துக் கைவிட்டுவிட்ட நிலையில், எனது அருமை மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு எங்கே செல்ல முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு, உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”.
ஆமாமா…. எங்களிடம் வராமல் நீங்கள் வேறு எங்கு செல்லமுடியும்? முடியாதுதான். இன்னும் என்ன என்னவெல்லாம் ஏத்த முடியுமோ ஏத்திக்கோங்கம்மா…. நாங்கதான் ஏத்துக்கத் தயாராக இருக்கிறோமே!

ஆனால், ஒரு சின்ன சந்தேகம் மேடம்….
உண்மையிலேயே இதுதான் காரணம்னு நீங்க நினைச்சிருந்தா… இதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடியே பண்ணி இருக்கலாமே. ஏன் பண்ணலே? அவ்வளவு விவரமா இருக்கீங்க….. அப்படித்தானே. ஆக, நீங்களும் அப்படித்தான்னு சொல்லாம சொல்லிட்டீங்க.
மம்மி அரசின் கஜானாவிலிருந்து ஆட்டுக் குட்டியும் கண்ணுக் குட்டியும் நாப்கினும் கொடுத்துட்டு, மத்திய அரசிடம் போயிப் பிச்சை கேட்ட மாதிரி நடிச்சா, பிரதமர் சிங்கு கொடுதுருவாரா என்ன? யார் கேட்டார்கள் ஆட்டுக் குட்டியும் கண்ணுக் குட்டியும் நாப்கினும்? மத்திய அரசுக்குத் தெரியாதா இதை எல்லாம் இலவசமாக கொடுக்க?
நிர்வாகத்தைச் சரியா நடத்தத் தெரியலேன்னா….. அந்தப் பழியைத் தூக்கி மத்தவங்க மேல போடுறதுல ஒன்னும் தப்பில்ல. மத்திய அரசு, கருணாநிதி, முடிஞ்சா அமெரிக்கா…. இப்படி யாரெல்லாம் பயப்படுகிற மாதிரி உங்களுக்குத் தோணுதோ, அவங்க மேல எல்லாம் பழியைப் போட்டுட்டு நீங்க பாட்டுக்கு விலைய ஏத்துங்க மேடம்..
இங்கே இருக்கிற மக்கள் எல்லாம் பொதி சுமந்தே பழக்கப் பட்ட ஒட்டகங்கள்தான். எவ்வளவு ஏத்துனாலும் தாங்குவாங்க. நிர்வாகத்தைச் சரி பண்ணக் கத்துக்கிற வரைக்கும் நீங்க உங்க இஷ்டத்துக்கு ஏத்துங்க மேடம்.
ஏன் பீர்..விஸ்கி..பிராந்தி போன்ற மது வகைகளின் விலையை உயர்த்த வேண்டியதுதானே? அதில் என்ன கஷ்டம்? சிகரெட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே?அதை விட்டு விட்டு மக்களின் அன்றாட இன்றியமையாத பொருளான பாலின் விலையையும்… பஸ் கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்? ஆடம்பரப் பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கலாமே. அதை விட்டு ஏன் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தினீர்கள்?

பொது மக்களுக்குத்தான் கட்டண உயர்வு….. ஆனால், ஜெயலலிதாவுக்கு மட்டும் ஹெலிகாப்டர் எல்லாம் வாடகைச் சைக்கிள் மாதிரி. நீங்க ஹெலிகாப்டர்ல போறதை நிறுத்தினாலே பாதி விலைவாசியைக் குறைக்கலாம். உங்களோட அமைச்சர் பெருமக்களைக் கூப்பிட்டு அநாவசியச் செலவுகளைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போடுங்கள். ஏ.சி. இல்லாமல் அவர்களால் இருக்க முடியுமா, முடியாதா என்று மட்டும் கேளுங்கள். பாதியளவு கடன் சுமை குறைந்துவிடும்.
சாதாரண பஸ்களுக்குக்கூட 70 முதல் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பஞ்சரானால் கூட பாதியோடு நின்றுவிடுகிற பஸ்களை வைத்துக்கொண்டு கட்டணத்தை ஏற்றுவதற்கு வெட்கமாக இல்லை?….
மிகவும் அதிகமாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, முதலில் எதிர்ப்போடும் பிறகு முணு முணுப்போடும் இறுதியில் வேறு வழி இல்லாமலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள். ஆனால், சொகுசுப்பேருந்து போலப் பளபளவெனக் காட்சி தரும் தனியார் பேருந்துகளுக்கும் கிலோ மீட்டருக்கு 56 காசுகள், நசுங்கிப்போன தகர டப்பா போல காட்சி தரும் அரசு பேருந்துகளுக்கும் அதே 56 காசுகளா? கட்டணம் நிர்ணயிக்கும் போது கிலோ மீட்டரை மட்டும் அளவு கோலாகக் கொண்டால் நியாயமல்ல. அந்த 56 காசுகளால் மக்களுக்கு ஒரே மாதிரியான பலன் கிட்டுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

அரசு டெப்போக்களில் டயர் வாங்காமலேயே வாங்கப்பட்டதாகக் கணக்கு எழுதி சம்பாதிப்பதும், பழைய உதிரி பாகங்களை காயலான் கடையில் வாங்கிப் புதிது போலக் கணக்கு எழுதுவதும் கண்காணிக்கப்பட வேண்டும். அல்லது பஸ் தனியார் மயமாக்கப்பட வேண்டும். இப்போது மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் எல்லாம் தனியார் கையில் தானே உள்ளது?..
அவர்கள் மட்டும் அநியாயமாக டிக்கெட் விலையை ஏற்ற மாட்டார்களா? என்பீர்கள். ஆம். ஏற்றுவார்கள். ஆனால் சேவையாவது திருப்தியாக இருக்கும் அல்லவா?. காயலான் கடைப் பேருந்துகளுக்கு சொகுசுப் பேருந்து, இடைநில்லாப் பேருந்து என்று விதம் விதமாகப் பெயரிட்டு மொட்டை அடிக்கும் பேத்து மாத்து இருக்காதல்லவா? அதற்குமேல் அரசுதான் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஓட்டுக்களை அள்ளுவதற்காக இலவசங்களை வாரி இறைத்ததன் விளைவுதான் இது. இலவசங்களும் வேண்டும் விலை ஏறக்கூடாது என்றால் எப்படி? இலவசங்களுக்கான செலவு நம் தலையில்தான் விடியும் என்பது இப்போதாவது புரிகிறதா? ஓடி ஓடி இலவசம் வாங்கியதன் பயன் இன்று மொத்தமாய் நம் தலையில் விடிகிறது.

இலவச மின்சாரத்தை உடனடியாக நிறுத்துங்கள். சரியான கட்டணம் எதுவோ அதை வசூலியுங்கள். நரேந்திரமோடி சொன்னது போல, தடையில்லாத, தரமான மின்சாரம் வேண்டுமானால் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று கூறுங்கள்.
ரேஷனில் வழங்கப்படும் இருபது கிலோ அரிசி தவிர, இலவசம் என்பதே கிடையாது என்று துணிந்து அறிவியுங்கள்; எப்படியும் ஐந்தாண்டுகள் உங்கள் ஆட்சி தான். இனி இந்த மக்களால் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. எதிர்கட்சிகள் என்பதே தமிழகத்தில் இல்லை. இதுவும் உங்களின் பலமே. நீங்கள் எது செய்தாலும் கேட்க ஆளில்லை.
மக்கள்….. அவர்கள் கிடக்கிறார்கள். ஒரு நாளும் அவர்கள் வீதிக்கு வந்து போராடப் போவதில்லை. மிஞ்சிப் போனால் ஒரு நாலு நாள் சத்தம் போடுவார்கள். பிறகு அமைதியாகி விடுவார்கள். அதுவும் நடுத்தர மக்கள்தான்.பாவம், அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது?
வலைத்தளங்களில் கருத்து எழுதுவது, பத்திரிகைகளைப் படித்துவிட்டுப் பேருந்துகளிலும், ரயில்களிலும் விவாதிப்பது….. என்று சில நாள் புலம்புவார்கள். அடித்தள மக்களை இந்தப் பிரச்சினைகள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அப்படியே ஏதாவது பிரச்சினை வந்தாலும் இருக்கவே இருக்கிறது…..; எம்.ஜி.ஆர்.படங்கள், பாடல்கள்….. அதையும் தாண்டி டாஸ்மாக்……
உயர்தட்டு மக்களுக்கோ எவ்வளவு ஏறினாலும் அது எறும்புக்கடி. உணரவே முடியாது. பாவப்பட்டவர்கள் நடுத்தர வர்க்க மக்கள் மட்டும்தான். எங்குமே பலவீனர்கள்தானே தாக்கப்படுகிறார்கள்?
அதுதான் இங்கும் நடக்கிறது. நடக்கட்டும்.அல்லி ராஜ்ஜியம்…..

இதுதான் எங்களோட இன்றைய நிலை!
அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருந்தோம்….. எந்தக் கொய்யா வந்தும் எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிஜம்.
தெரிந்தே செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிக்கட்டும் மக்கள். நன்றாக அனுபவிக்கட்டும்…..
அடுத்து எந்தப் புண்ணியவானாவது வரமாட்டானா என்று வழக்கம்போல எதிர்ப்பார்த்துக் காத்திருப்போம்.
அதுவரையிலும், பொம்பளைகளுக்கு இலவசமா நாப்கின் கொடுக்கிற மாதிரி, ஆம்பிளைங்களுக்கு இலவசமா கர்ச்சீப் கொடுக்கலாம். கட்டண உயர்வைப் பார்த்து வருகிற கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவாவது உதவும்..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...