உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 18, 2011

பிளாக்கரில் புதிய வசதி - Open this link in a new window


இந்த பிளாக்கர் பல புதிய வசதிகளை அடிக்கடி வாசகர்களுக்கு அளிப்பார்கள். அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் புதிய வசதி Open this link in new tab வசதி. இந்த வசதி என்ன அதை எப்படி உபயோகப்படுத்துவது எப்படி என கீழே பார்ப்போம். நாம் பதிவில் வாசகர்களுக்கு ஏதேனும் தகவல்களோ அல்லது தரவிறக்கம் செய்யவோ மற்ற தளத்தின் லிங்க் கொடுத்து இருப்போம். அல்லது உங்களுடைய முந்தைய பதிவின் லிங்கை இந்த பதிவில் கொடுத்து இருப்பீர்கள். வாசகர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் ஓபன் ஆபாமல் அந்த பதிவிலேயே ஓபன் ஆவதால் இருக்கிற பதிவு மறைந்து விடும். வாசகர்கள் திரும்பவும் புதிய விண்டோவை திறந்து உங்களின் பதிவுக்கு வருவார்கள் அல்லது வராமலே சென்று விடுவார்கள்.
ஆகவே நாம் இந்த லிங்க் வேறொரு விண்டோவில் ஓபன் ஆக சில கோடிங்(target="_blank") பதிவில் சேர்த்து இருப்போம். அல்லது நமது டெம்ப்ளேட்டில் சேர்த்து இருப்போம். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. இந்த வசதியை பிளாக்கர் தளம் அறிமுகபடுத்தி உள்ளனர். 

உபயோகப்படுத்துவது எப்படி:
  • பதிவில் லிங்க் கொடுக்க எப்பொழுதும் போல Link பட்டனை அழுத்துங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவை பாருங்கள் அதில் புதியதாக ஒரு வசதி காணப்படும்.
  • இனி பதிவில் லிங்க் கொடுக்கும் பொழுது மேலே படத்தில் காட்டி இருக்கும் பகுதியில் டிக் பண்ணிவிடவும். இனி வாசகர்கள் இந்த லிங்கை கிளிக் செய்தால் அது அடுத்த டேபில் திறக்கும். இந்த பதிவும் அப்படியே இருக்கும். 
Note1: இந்த வசதியின் மூலம் பதிவில் கொடுக்கும் லிங்க் மட்டும் அடுத்த டேபில் திறக்க செய்ய முடியும். ஆனால் உங்களின் வலைப்பூவில் உள்ள அனைத்து லிங்கும் வேறொரு டேபில் திறக்கவேண்டுமென்றால் இதில் செல்லுங்கள்.

Note2: இந்த வசதி குறிப்பிட்ட சில நாட்களுக்குள் தான் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் சரியாக எந்த தேதியில் அறிமுக மாகியது என தெரியவில்லை. நேற்று தான் நான் இந்த வசதியை பார்த்தேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...