உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 22, 2011

குறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய- Aakash Tablet with Android2.2இந்தியாவில் முதன் முதலாக Datawind நிறுவனத்தினர் மிகக்குறைந்த விலையே உள்ள Tablet கணினிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்க்கு ஆகாஷ் என்று பெயரிட்டு உள்ளனர். Datawind நிறுவனத்தினர் ரூபாய் 2,250 விலையில் 10,000 கணினிகளை Indian National Mission for Education என்ற அமைப்புக்கு வழங்கி உள்ளனர். அந்த கணினிகளை IIT, REC, BITS களில் பயிலும் மாணவர்கள் உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர். இப்பொழுது Datawind நிறுவனத்தினர் இந்த Tablet கணினிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட உள்ளனர். இதன் விலை Rs 3,000 என நிரனயிதுள்ளனர். இதனுடன் Rs. 400 மதிப்புள்ள கீபோர்ட் ஒன்றும் வழங்குகின்றனர். ஆக மொத்த விலை Rs. 3,400 ஆகும். இதன் சிறப்பம்சங்களும் ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்றும் கீழே காணலாம்.சிறப்பம்சங்கள்:
  • 7" அளவுடைய இதில் Android2.2 இயங்கு தளங்கள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • முழுவதும் தொடு திரை(touch screen) வசதியுடன் ஆனது.
  • இதில் மாதத்திற்கு 2GB உபயோகப்படுத்த வெறும் Rs. 98 செலுத்தும் வண்ணம் Data Plan அமைக்கப்பட்டுள்ளது.
  • Wi-Fi, USB Port  மற்றும் Micro-SD ஆகிய வசதி உள்ளது.
  • 75MB அளவுள்ள பைலை வெறும் 25MB பைலாக மாற்றி சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் இதில் உள்ளது. 

ஆன்லைனில் முன்பதிவு செய்ய:
Datawind நிறுவனம் இந்த வகை கணினிகளை அடுத்த மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளியிட உள்ளது. சுமார் 250,000 கணினிகளை ஒரு வருட இலக்காக நிர்ணயித்தது ஆனால் இதுவரைக்குமே சுமார் 300,000 கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம். நாளுக்கு நாள் முன்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறதாம். இந்திய மக்களின் அமோக வரவேற்பை பெற்றதனால் இலக்கை 500,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது.இந்த கணினிகளை முன்பதிவு செய்ய இந்த லிங்கில் Aakash Tablet கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு ஆகாஷ் கணினியின் தளம் ஓபன் ஆகும் அதில் வலது பக்க கீழே Enquiry Now என்ற ஒரு பகுதி இருக்கும் அதில் உங்கள் சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள submit என்ற பட்டனை அழுத்தவும்.


அவ்வளவு தான் உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்படும். உறுதி செய்ய உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள் அந்த மெயிலில் கணினியை பற்றி சில விவரங்களும் அனுப்புவார்கள். 

Toll free: 1800 180 2180 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆகாஷ் tablet கணினிகளை போன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

பள்ளிகளுக்கோ, தங்களின் நிறுவனத்திற்கோ மொத்தமாக இந்த ஆகாஷ் கணினிகள் வாங்க எண்ணினால் erp@datawind.com என்ற ஈமெயில் ஐடியில் தொடர்பு கொண்டால் மானிய விலையில் கிடைக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...