உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, December 03, 2011

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8] நன்றி Abdul Basithவலைப்பதிவுகளில் (Blogs) முக்கியமான ஒன்று, பின்னூட்டங்கள் (Comments). நாம் எழுதும் பதிவுகளைப் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், பதிவு பிடித்திருந்தால் பாராட்டவும், பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்  இவ்வசதி பயன்படுகிறது. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 ப்ளாக்கர் டாஷ்போர்ட் பகுதியில் More Options பட்டனை கிளிக் செய்து, Comments என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதை கிளிக் செய்தவுடன் Published Comments பகுதிக்கு செல்லும்.  Comments பகுதியில் வாசகர்கள் இட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டமிட்ட பதிவின் தலைப்பு, பின்னூட்டமிட்ட நாள், பின்னூட்டமிட்டவரின் பெயர் ஆகிய விவரங்கள் இருக்கும். மேலும் Comments பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். 

Published - பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் 

Awaiting Moderation - நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள்

Spam - எரித பின்னூட்டங்கள் (தேவையில்லாத, விளம்பரத்திற்காக கொடுக்கப்படும் பின்னூட்டங்கள்)
Published:
Published பகுதியில் இதுவரை பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும். அந்தந்த பின்னூட்டங்களின் மேலே மவுஸை கொண்டு போனால் மூன்று தேர்வுகள் காட்டும். 


Remove Content - ஏதாவது அநாகரிகமான பின்னூட்டங்கள் வந்தால் அதனை நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் பின்னூட்டம் இட்டவரின் பெயர் இருக்கும். அவர் சொன்னவை மட்டும் நீக்கப்பட்டிருக்கும்.


Delete - பின்னூட்டத்தையும், பின்னூட்டம் இட்டவரின் பெயரையும் சேர்த்து நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். (ஒருமுறை நீக்கிவிட்டால் அதனை திரும்பப் பெற முடியாது)

Spam -  பின்னூட்டங்களை ப்ளாக்கில் பிரசுரிக்காமல் Spam பகுதியில் வைக்க இதனை கிளிக் செய்யுங்கள்.


Awaiting Moderation:


Awaiting Moderation பகுதியில் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள் இருக்கும். இதில் Publish, Delete, Spam என்று மூன்று தேர்வுகள் இருக்கும். 


Spam:
Spam பகுதியில் எரித (தேவையில்லாத) பின்னூட்டங்கள் இருக்கும். தானியங்கி முறையில் சில பின்னூட்டங்களை Spam பகுதிக்கு அனுப்பிவிடுகிறது ப்ளாக்கர். அதில் சில நல்ல பின்ன்னோட்டங்களும் இருக்கும். அது போன்ற பின்னூட்டங்களை பிரசுரிக்க Not Spam என்பதை கிளிக் செய்யுங்கள்.


கவனிக்க: ப்ளாக்கரில் Default-ஆக பின்னூட்டங்கள் உங்கள் அனுமதியில்லாமலேயே பிரசுரமாகும். மேலும் வாசகர்கள் பின்னூட்டமிடும் போது Word Verification கேட்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...