உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, December 06, 2011

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-9] Thanks to Abdul Basith
Image Credit: www.extramortgages.com/

பதிவு எழுதுவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை (Statistics) அறிந்துக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய ப்ளாக்கை மேம்படுத்த உதவும்.

இந்த தகவல்களை நாம் அறிந்துக் கொள்ள Stats பகுதி பயன்படுகிறது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ப்ளாக்கர் டாஷ்போர்டில் More options பட்டனை க்ளிக் செய்து, Stats என்பதை க்ளிக் செய்யுங்கள்.அல்லது டாஷ்போர்டில் உங்கள் பெயருக்கு கீழே பக்க பார்வைகளை (Page Views) காட்டும் இடத்தில் க்ளிக் செய்யுங்கள்.பிறகு மேலோட்டமான புள்ளிவிவரங்களைக் (Overview Stats) காட்டும்.


இதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கால(ம்)வாரியாக  புள்ளிவிவரங்கள்:


இந்த பட்டன்கள் மூலம் தற்போது, கடந்த ஒரு நாள், கடந்த வாரம், கடந்த மாதம், மொத்தமாக என்று காலவாரியான புள்ளிவிவரங்களைக் காணலாம்.

மேலோட்டமான புள்ளிவிவரங்கள்:


இன்று, நேற்று, கடந்த ஒரு மாதம், மொத்தமாக என்று பக்க பார்வைகளை (Pageviews) மேலோட்டமாக பார்க்கலாம்.

அதற்கு  கீழே உள்ள Don't track your own pageviews என்பதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்.


நம்முடைய ப்ளாக்கை நாம் பார்ப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.

நம்  பார்வைகளையும் சேர்க்க வேண்டும் என்றால் "Track my pageviews"என்பதையும், வேண்டாம் என்றால் "Don't track my pageviews" என்பதையும் தேர்வு செய்யுங்கள்.

ஒரு உலவியில் "கணக்கில் சேர்க்க வேண்டாம்" எனத் தேர்வு செய்து, மற்ற உலவிகளில் உங்கள் ப்ளாக்கை நீங்கள் பார்த்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

பதிவுகளின் புள்ளிவிவரங்கள் (Posts):


இது நம்முடைய பதிவுகள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற புள்ளிவிவரங்கள் ஆகும். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.


பதிவுகள் மட்டுமின்றி, நாம் உருவாக்கிய தனி பக்கங்களும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை காட்டும்.

பரிந்துரைத் தளங்களின் புள்ளிவிவரங்கள் (Traffic Sources):


எந்த தளங்களில் இருந்து நமது தளத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள்? என்பதை இங்கு காணலாம். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.

Referring URLs - எந்த இணையப் பக்கத்திலிருந்து வந்தார்களோ? அதன் முகவரியையும், அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.

Referring Sites - எந்த தளத்தில் இருந்து வாசகர்கள் வந்தார்களோ? அந்த தளத்தின் முகவரியையும், அந்த தளத்தில் இருந்து  எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.

உதாரணத்திற்கு மேலுள்ள படத்தில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் மூன்று பக்கங்களில் இருந்து வாசகர்கள் வந்துள்ளார்கள். இது Referring URLs ஆகும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தின் முகவரி (http://bloggernanban.blogspot.com) Referring Site ஆகும்.

Search Keywords - தேடுபொறிகளில் இருந்து எந்த வார்த்தைகளைத் தேடி நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களைக் காட்டும்.


வாசகர்களின்  விவரங்கள் (Audience):

எந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்பதை வரைப்படமாகக் காட்டும். இதில் More என்பதை க்ளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.Pageviews by Countries - எந்த நாடுகளில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

Pageviews by Browsers - எந்த இணைய உலவியில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

Pageviews by Operating Systems - எந்த இயங்குதளத்தில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...