உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, December 28, 2011

ஆன்-லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்;மூன்று மாதத்தில் செயல்படுத்த திட்டம்


ஆன்-லைனில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடர்பாக, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இத்திட்டத்தை, இன்னும் மூன்று மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு சான்றிதழும், இறப்பு சான்றிதழும் மிக முக்கியம். பள்ளியில் சேரும்போது, வயதை கணக்கிடுவதற்காக, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்பது வழக்கம். அதேபோல், குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால், அவரது சொத்தை பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது வேறு பணிகளுக்கோ இறப்பு சான்றிதழ் தேவை. மருத்துவமனையில் இறந்தால் டாக்டர்களும், வீட்டில் இயற்கையாக மரணம் அடைந்தால், அருகில் உள்ள வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மூலம் கையெழுத்து பெற்று சான்றிதழ் தரப்படுகிறது.
பிறக்கும் குழந்தைகளில் 71 சதவீதம் பேர் கட்டாயம் பதிவு செய்கின்றனர்; இறப்பு நிகழ்ந்தால், 23 சதவீதத்தினரே பதிவு செய்கின்றனர் என்கிறது மருத்துவத்துறையின் ஆய்வு அறிக்கை. தமிழகத்தில் பிறப்பு - இறப்பு பதிவை கட்டாயமாக்க, அக்கணக்கெடுப்பை ஆன்லைனில் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தது.
"பல ஆரம்ப சுகாதார மையங்களில் கம்ப்யூட்டர் வசதி இல்லாமல் இருப்பதால், முதலில் கம்ப்யூட்டர் தர வேண்டும்; "சர்வர்' கோளாறுகளை தவிர்க்க, "நெட்ஒர்க் கனெக் ஷன்' அவசியம். கம்ப்யூட்டரை இயக்க, சான்றிதழ் "பிரின்ட் அவுட்' எடுக்க, தனி பணியாளர் நியமிக்க வேண்டும்,' என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்த அதிகாரிகள், சான்றிதழ் வழங்கும் பொறுப்பை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்படி, பிறந்த குழந்தை, இறந்தவரின் முழு விவரம், அவர்களுக்காக சான்றிதழ் பெற வருபவர்களின் விவரம், தமிழக அரசால் உருவாக்கப்பட உள்ள தனி "சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு தனி குறியீடு கொடுக்கப்படும். அவை சான்றிதழில் ஒட்டப் படும். இத்திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...