உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, December 26, 2011

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார்
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை.

நன்றி சுஜா

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...