உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, December 24, 2011

"தட்கல்" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் !பேருந்து கட்டண உயர்வின் எதிரொலியாக அனேகம் பேர் தொடர்வண்டியில் பிரயாணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதைய பேருந்து கட்டணத்தைக்  காட்டிலும் தொடர்வண்டி கட்டணம் மிகக் குறைவாக தெரிகிறது. எனவே கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்தாலொழிய பயணச் சீட்டோ, அமர இடமோ கிடைப்பதில்லை.

'தட்கல்' முறையில் பயணச் சீட்டு வேண்டுமெனில் இரண்டு நாட்களுக்கு  முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இது முன்பு இருந்த விதி. தற்போது கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல், பயணம் செய்வதற்கு முதல் நாளில்தான் தட்கல் பயணச் சீட்டு வழங்கப்படும் என்று தொடர்வண்டி நிருவாகம் அறிவித்துள்ளது. அதாவது தொடர்வண்டி கிளம்பும் தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக மட்டுமே தட்கல் சீட்டு வழங்கப்படும். சுருங்கச் சொன்னால் முன்பதிவானது, 48  மணி நேரங்களுக்கு முன்பு என்பது தற்போது 24  மணி நேரங்களுக்கு முன்பு என்று ஆக்கப் பட்டுள்ளது. 


ஒரு தொடர்வண்டி அதன் தொடக்க நிலையத்தில் இருந்து அடுத்தமாதம் இரண்டாம் தேதி புறப்படுகிறது என்றால், அதற்கான தட்கல் பயணச் சீட்டு வழங்கும் நேரம் அதற்கு முந்தைய தினமான 1-ஆம் தேதி காலை 8  மணிக்கு தொடங்குகிறது. முந்தைய நடைமுறைப்படி இரண்டு நாட்களுக்கு முன்பே தட்கல் சீட்டு பெறலாம் என்ற நிலை இருந்த போது, ஒரேடியாக அனைவரும் கணினியில் குவிந்து பதிவு செய்தனர். (அச்சமயம் தொடர்வண்டி நிருவாக இணையத்தளம் கூட சட்டென திறக்காமல் சண்டித்தனம் செய்யும்.) இதனால் விரைவில் எல்லா  சீட்டுகளும்  தீர்ந்து,  இடத்திற்கான மறு வாய்ப்புக்கு வழி இல்லாமல் போனது. தற்போது இந்த மறு வாய்ப்பு, தினம் தினம் பயணிகளுக்கு கிட்டியுள்ளது. இது பயணிகளுக்கு கிடைத்துள்ள உள்ளபடியான வசதி என்று எனக்குத் தோன்றுகிறது. (இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருந்தால் கருத்துரை இடலாம்.)

அதே நேரம் இங்கு மற்றொரு சங்கதியையும் அலச வேண்டியுள்ளது. அதாவது தட்கல் முறையில் பயணச் சீட்டு பெற்று, அதை இரத்து செய்தால் பயணக் கட்டணம் திரும்பத் தரப்படமாட்டது. இது தொடர்வண்டி நிருவாகத்தின் வணிகச் சுற்றறிக்கை கூறும் விதி.இதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உடன்பாடு இல்லை. 

சாதாரண முன்பதிவு சீட்டை இரத்து செய்தால் எப்படி கட்டணம் திரும்பத் தரப்படுகிறதோ, அவ்வாறே தட்கல் சீட்டுக்கும் தரப்படவேண்டும். காரணம் தட்கல் முன்பதிவு முறையில் முன்பதிவு செய்தவர் தனது பயணத்தை தள்ளி வைக்கிறார் அல்லது அவரால் அன்றைய தினம் பயணம் செய்ய இயலவில்லை என்றால், அவர் தனது தட்கல் பயணச் சீட்டை இரத்து செய்ய முன்வருவதில்லை. 'இரத்து செய்தால்தான் என்ன கிடைக்கப் போகிறது?' என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் இருந்து விடுவர்.பெரும்பாலனோர் அதற்காக மெனக்கெடுவதில்லை.  அப்போது என்ன ஆகிறது?அவருக்கடுத்து காத்திருப்போருக்கு சீட்டு கிடைப்பதில்லை. இதனால் யாருக்கு என்ன பலன்? 
'தட்கல்' சீட்டை இரத்து செய்வோருக்கு, பயணக் கட்டணத்தை தொடர்வண்டி நிருவாகம் தர மறுப்பது நியாயமா?

எனவே சாதாரண பயண சீட்டை போல், தட்கல் முறை பயணச் சீட்டை இரத்து செய்தாலும், பயணக் கட்டணத்தை திரும்பத் தர தொடர்வண்டி நிருவாகம் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

என்ன சரிதானே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...