உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, December 29, 2011

ஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட முயற்சி :திருப்பூரில் துணிகர சம்பவம்


                          

திருப்பூர் பி.என்., சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர். திருப்பூர் பி.என்., சாலை, மில்லர் பஸ் ஸ்டாப் அருகில் "ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானிர் அண்டு ஜெய்ப்பூர்' வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., சென்டர் உள்ளது; இரண்டு ஏ.டி. எம்., மெஷின்கள் உள்ளன; பாதுகாவலர் வசதி இல்லை. 27 ஆம் தேதி நள்ளிரவு, ஏ.டி.எம்., மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு மெஷினை உடைத்து, பணத்தை திருட முயற்சித்தும் முடியாததால் சென்று விட்டனர். 28ஆம் தேதி, வங்கி மேலா ளர் ராம்குமார் ஆய்வு செய்த போது, மெஷின் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகையை பதிவு செய்தனர். ஒரு ஏ.டி.எம்., மெஷினில் இருந்த 29 லட்சத்து 85 ஆயிரத்து 800, அதே அறையின் மற்றொரு மெஷினில் இருந்த 13 லட்சத்து 14 ஆயிரத்து 200 ரூபாய் தப்பியது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...