உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, December 09, 2011

ஜிமெயில் – பகுதி II

இந்த போஸ்ட் இல் Gmail பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்பாக்ஸ்

மெயில்ளுக்கு வந்த செய்திகள் அனைத்தும் உங்கள் இன்பாக்ஸ் ல் வரிசையாக இருக்கும்.ஒவ்வொரு செய்தியின் இடது பக்கம் ஒரு சில முக்கிய கூறுகள் இருக்கும்.
அதில் முதலாவதாக அடுக்கு புள்ளி இருக்கும்.அதை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட செய்தியை மட்டும் (Drag and drop) இழுது கொண்டு போய் இடது பக்கம் உள்ள Folder ல் வைக்கலாம்.
அடுத்து உள்ளது செக் பாக்ஸ்.இதை பயன்படுத்தி பல செய்திகளை செலக்ட் செய்து மொத்தமாக அந்த செய்திகளை மேலே உள்ள டூல் பார்ரின் மூலம் வரிசைப்படுத்தலாம்.
அடுத்து உள்ளது நட்சத்திர குறியீடு.குறிப்பிட்ட செய்திக்கு அருகில் உள்ள நட்சத்திர குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் அந்த செய்தி உங்கள் இன்பாக்ஸ் ல் தனித்து தெரியும்.
இடது Side bar பயன்படுத்தி மின்னஞ்சல்களை கண்டறிதல்

இடது பக்கம் இருப்பது தான் “Left Side bar”.இங்கு தான் ஜிமெயில் அக்கௌன்ட்னுடைய பல பிரிவுகளை பார்க்கமுடியும்.
1. Inbox-மூலம் புதிய மின்னஞ்சல்களை காணலாம்(உங்களுக்கு தெரிந்தது தான்).
2. Starred-வலது உள்ள ஒவ்வொரு செய்தி அருகிளும் சம்பல் நிற நட்சத்திரம் உள்ளது.அதை கிளிக் செய்தால்,அந்த குறிப்பிட்ட செய்தி “Starred” Folder ல் காண்பிக்கப்படும். சிறப்பு உரையாடல்கள் அல்லது செய்திகளுக்கு நட்சத்திரங்கள் அமைக்கலாம், அல்லது நீங்கள் பின்னர் ஒரு செய்தியை அல்லது உரையாடலை பின்பற்ற வேண்டும் என்றால் நினைவூட்டளுக்காக அவற்றை பயன்படுத்தலாம்.நீங்கள் மேலும் செய்திகளுக்கு தகுந்தவாறு பல்வேறு வகையான நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு பதில் தேவை என்றால் அதற்கு பச்சை நட்சத்திரம், அல்லது நீங்கள் தொடர வேண்டும் என்னும் செய்திக்கு ஆச்சரியக்குறியை உபயோகிக்கலாம்.
பல்வேறு நட்சத்திர விருப்பங்களை அணுக, கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்.
i. ஜிமெயில் மேல் வலது மூலையில் உள்ள கியர் Icon சொடுக்கிய பின் அஞ்சல் அமைப்புகள் சொடுக்கவும்.
ii.பொது தாவலில், நட்சத்திரங்கள் பிரிவுக்கு சென்று தேர்ந்தெடுத்து மாற்றங்களை சேமிக்கவும்.
3. Important – வலது உள்ள ஒவ்வொரு செய்தி அருகிளும் சம்பல் நிற நட்சத்திரம் உள்ளது.அதற்கு பக்கத்தில் இருக்கும் பெட்டி போன்ற குறி தான் “Important” செய்திக்கான குறி.அதை கிளிக் செய்தால்,அந்த குறிப்பிட்ட செய்தி “Important” Folder ல் காண்பிக்கப்படும்.ஜிமெயில் செய்திகளை பல்வேறு வகையாக குறிக்க வெவ்வேறு நிற அம்புகள் பயன்படுத்தலாம். ஒரு மஞ்சள் அம்பு செய்தி முக்கியமான மற்றும் படிக்காத என்பதை குறிக்கிறது. ஒரு சாம்பல் மார்க்கர் செய்தி முக்கியமல்லாத ஆவணம் என்பதை குறிக்கிறது. நீங்கள் ஒரு செய்தியை முக்கியம் என்று வகைப்படுத்தியது ஏன் என்று தெரிய விரும்பினால், செய்தி முக்கியத்துவம் மார்க்கர் குறி மேல் உங்கள் சுட்டியை நகர்த்தினால் அதற்குரிய செய்தியை காண்பிக்கும்.
“Important” குறிப்பான் ஐ மறைப்பது எப்படி?
நீங்கள் விரும்பினால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி குறிப்பான் ஐ மறைக்க முடியும்:
i. உங்கள் ஜிமெயில் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள கியர் Icon சொடுக்கி அஞ்சல் அமைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
ii. இன்பாக்ஸ் தாவளுக்கு சென்று “முக்கியத்துவம் குறிப்பான்கள்” பிரிவில், குறிப்பான்கள் விருப்பம் இல்லை தேர்ந்தெடுக்கவும்.
4. Sent Mail- நீங்கள் அனுப்பிய அனைத்து மெயில்களும் இந்த “Sent Mail” தொகுப்பில் இருக்கும்.
5. Draft – நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது செய்திகள் இழப்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஜிமெயில்ளில் ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை தானாகவே சேமித்துக்கொள்ளும்.
6. அடுத்து உள்ளது ”Personal” and “Travel.”இந்த பிரிவுகளை தான் “Labels” என்று ஜிமெயில்ளில் அழைக்கிறோம்.நீங்கள் “Labels” கொடுக்கப்பட்ட செய்திகள் இங்கே காணலாம்.”Folder”ல் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தும் இதன் மூலம் செய்யலாம்.அதுமட்டுமில்லாமல் போனஸ் ஆக ஒரு உரையாடலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட “Label”கள் சேர்க்க முடியும். நீங்கள் “Label” ஐ உருவாக்கி விட்டு, அந்த “Label”க்கு உண்டானா அனைத்து செய்திகளையும் பார்க்க “Search” மூலம் அல்லது ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில் உள்ள பெயரை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.லேபிளை உருவாக்க:
இடது பக்கம் உள்ள drop-down மெனுவில் “Create New Label” கிளிக் செய்யவும் அல்லது கியர் ஐகான்னை கிளிக் செய்து,Mail settings உள்நுளைந்து Labels தாவலுக்கு சென்று.” Create new” தேர்ந்தெடுத்து.லேபிலின் பெயரை டைப் செய்து,ஓகே கிளிக் செய்யவும்.
உங்கள் செய்திகளை வகைபடுத்த விரும்பினால், வகைபடுத்த விரும்பும் செய்திகளை தேர்ந்தெடுத்து மேலே உள்ள “Move to” கிளிக் செய்து.தேவையான லேபிளுக்கு நகர்த்திக் கொள்ளலாம்.
7. Spam – உங்களுக்கு வந்த “Spam” ஈமெயில்கள் இந்த போல்டரில் இருக்கும்.
8. All Mail – நீங்கள் ஆவணக்காப்பகத்தில் சேமித்து வைத்த செய்திகளை இங்கே பார்க்கலாம்.
9. Trash – ஒரு செய்தியை Delete செய்துவிட்டால் நிரந்தரமாக செய்தி நீக்கப்படும்.ஆனால் உடனடியாக அல்ல.அதற்கு தோராயமாக 30 நாள் எடுக்கும்.அதனால் தற்செயலாக செய்தியை நீக்கிவிட்டால்,உடனடியாக “Trash”க்கு சென்று “Move to inbox” கொடுப்பதன் மூலம் பெற முடியும்.
10. Chat- நீங்கள் சாட் மூலம் உரையாடிய அனைத்து உரையாடல்களும் இங்கே சேமிக்கப்படும்.
அவ்வளவு தான் ஜிமெயில் பற்றி பார்த்தாச்சு…இதில் எதாவது விட்டு போயிருந்தால் சொல்லவும்.Discuss பண்ணலாம்

1 comment:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...