உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, December 06, 2011

கூகிளின் புதிய தோற்றம் - New Google Barகூகிள் என்பதற்கு அகராதியில் "மாற்றம்" என்ற பொருளையும் சேர்த்துவிடலாம். அந்த அளவிற்கு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூகிள் தேடல், ஜிமெயில் போன்ற தளங்களின் மேலே கருப்பு நிற பட்டையைக் கொண்டு வந்தது அல்லவா? அதன் தோற்றத்தை தற்போது மாற்றியுள்ளது.

கூகிளின் எழுதப்படாத விதியின்படி இந்த வசதியையும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்களுக்கு வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. எனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை.

[படங்களை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்]

பழைய கூகிள் பட்டையின் தோற்றம்:


புதிய தோற்றம்:இதில் கூகிள் லோகோவிற்கு பக்கத்தில் இருக்கும் சிறிய ஐகானை கிளிக் செய்தால் கூகிளின் மற்ற தளங்களின் சிறிய பட்டியல் வரும். அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லலாம்.இதில் More என்பதை கிளிக் செய்தால் ப்ளாக்கர் உள்ளிட்ட மேலும் பல கூகிள் தளங்களை காட்டும்.


பழைய பட்டையில் இருந்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரும் வசதி இருந்தது அல்லவா? அதனையும் இதில் சேர்த்துள்ளது.


வலது புறத்தில் Shareஎன்னும் பட்டனை கிளிக் செய்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

இது பற்றி கூகிள் வெளியிட்டுள்ள வீடியோ:
உங்களுக்கு இந்த வசதி கிடைத்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...