உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, December 23, 2011

பேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வாசகர்களுக்கும்

      பல சோதனை கட்டங்களை தாண்டி பேஸ்புக் தளம் புதிய Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது. (பெரும்பாலானவர்கள் அப்பொழுதே இந்த புதிய தோற்றத்திற்கு மாறி விட்டார்கள் என்பது வேறு கதை). அடுத்து கடந்த வாரம் நியுசிலாந்தில் உள்ள அனைத்து பேஸ்புக் கணக்குகளுக்கும் வெளியிட்டு அடுத்த சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனையிலும் வெற்றி கண்டதால் அடுத்த கட்டமாக இந்த புதிய Timeline தோற்றத்தை உலகம் முழுவதும் வெளியிட்டு உள்ளனர். இனி அனைத்து பேஸ்புக் பயனர்களும் இந்த புதிய தோற்றத்தை பெறலாம்.



இந்த லிங்கில் கிளிக் செய்து சென்றால் உங்களுக்கு Get Timeline என்ற லிங்கை கிளிக் செய்யவும் (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get Timeline லிங்க் வராது). ஒருவேளை பழைய தோற்றத்தை உபயோகித்து கொண்டு இருந்தும் அந்த லிங்க் வரவில்லை என்றால் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.


7-day Review Period:
இந்த புதிய timeline தோற்றத்தில் ஆக்டிவேட் செய்த முதல் 7 நாட்கள் Review Period ஆகும். அதாவது இந்த 7 நாட்களுக்குள் உங்கள் Timeline தோற்றத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்ன தெரிய கூடாது என நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். 

உங்களுடைய Timeline தோற்றம் உங்கள் நண்பர்களுக்கு எப்படி தெரிகிறது என்பததையும் நீங்கள் பார்க்கும் வசதியும் உள்ளது. View As கிளிக் செய்து பார்த்தல் மற்றவர்களுக்கு எப்படி தெரிகிறது என்பதை பார்த்து கொள்ளலாம்.




குறிப்பிட்ட பதிவை மறைக்க:
குறிப்பிட்ட ஒரு பதிவை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் வசதியும் இந்த timeline தோற்றத்தில் உள்ளது.


மேலும் இந்த புதிய Timeline தோற்றத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த புதிய தோற்றத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு செல்லவும்
 நன்றி   வந்தேமாதரம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...