உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, December 11, 2011

எவ்வாறு கணணியை பயனாளர்கள் (Users) Shut Down செய்வதை தடுப்பது.

எவ்வாறு கணணியை பயனாளர்கள் (Users) Shut Down செய்வதை தடுப்பது.:
நீங்கள் கணணி நிர்வாகியாக கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவரா? அல்லது உங்களது கணணியை அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனரா? அப்படிப்பட்ட நீங்கள் உங்களது கணனியின் முழு பாவனையையும் உங்களது பயனர்களுக்கு நீங்கள் அளிப்பது இல்லை. உங்களது கோப்புகளின் தனயுரிமை (privacy ) காரணமாக உங்களது பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை கணணியில் அமைத்து வைத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு செயன்முறையை இன்று பார்ப்போம். அதாவது எவ்வாறு உங்களது கணணி பயனாளர்களை shut down செய்யாமல் தடுப்பது என்று. அதற்கு
விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடுதல் பெட்டியில் (Search Box) Local Security Policy யை திறப்பதற்காக secpol.msc என்று டைப் செய்யுங்கள். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவராக இருந்தால் Win + R என அழுத்தி, திறக்கும் திரையில் “secpol.msc” எழுதி என்டர் விசையை (Enter Key) அழுத்துங்கள்.   


இடது பக்கம் உள்ள Local Security Policy editor யில் Local Policies எனும் கோப்பை திறந்து அதில் User Rights Assignments என்பதை தெரிவு செய்க. வலது பக்கம் உள்ள திரையில் எல்லா policies யை பட்டியலாக காட்டப்பட்டிருக்கும்.  


   
வலது பக்கம் உள்ள பட்டியலில் நீங்கள் Shut down the system என்பதை கண்டுபிடித்து, அதன் மேல் இரு தடவை அழுத்துங்கள். பின்னர் உங்களது திரையில் down the system Properties திறக்கும்.

கணணியை பயனாளர்கள் (User) Shut Down செய்வதை தடுக்க. நீங்கள் Shut down the system Properties திரையில் காட்டப்படும் Local Security Setting என்பதை அழுத்துங்கள் . பின்னர் அங்கே காட்டப்படும் பட்டியலில் User என்பதை அழுத்தி, கிழே உள்ள Remove பொத்தானை அழுத்துங்கள்.

இறுதியாக Apply கொடுத்து OK பண்ணுங்கள். முடிந்தது வேலை, இனி உங்கள் பயனாளர்கள் உங்களது கணணியை Shut down செய்ய முடியாத அளவிற்க்கு கட்டுப்பாடு விதித்து விட்டீர்கள். 

நன்றி.

  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...