உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 31, 2012

போலீஸ்சார் எஸ்எம்எஸ் அனுப்பினால் வாகனத்தின் முழு விவரம் பெறலாம்!

குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாக ஒருசில விநாடிகளில் எந்தவொரு வாகனத்தின் முழு விவரங்களையும் பெற்றிடும் புதிய தொழில்நுட்பத்தை திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாகனத் திருட்டு, விபத்து, விதிமுறை மீறல் போன்றவற்றைக் குறைக்க முடியும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
÷திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் திருட்டு, வாகன ஓட்டுனர்களின் விதிமீறல் போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இக் குற்றச்செயல்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் வாகனக் கண்காணிப்பு முறை (விடிஎஸ்) என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
÷இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர், சந்தேகத்துக்குரிய வாகனத்தின் எண்ணை தங்களது அலைபேசி மூலம் இம்மென்பொருளுக்கு குறுந்தகவலாக அனுப்பினால், ஒருசில விநாடிகளில் அவ் வாகனத்தின் உரிமையாளர், அவ்வாகனம் மீதான வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

LDC 31.01.2012

tantransco Grid Map of Tamilnadu


      About TANTRANSCO

TANTRANSCO consists of  the following network infrastucture:
   HT and EHT for a total length of 1.7 Lakhs Kms.
  A  total  of 1310 substations . 95 Substations in and around Chennai have been provided with SCADA  and have been integrated into Chennai Distribution and control center (DCC) TNEB has one State Load Dispatch Centre at Chennai and 3 Sub LDCs at Chennai, Madurai and Erode. 
       The transmission network expansion is  aimed at evolving a national power grid to facilitate free flow of power across regional boundaries, raising the transmission voltage from 230 kV to 400 kV level.  In order to evacuate bulk power from one region to another region, there is scope for enhancing the  transmission capability to 765 KV level. TANTRASCO has taken up the indigenous erection of 400 KV substations and lines . Establishment of 765 KV transmission lines is also under investigation.  
     The Government of India has approved  nondiscriminatory open access to the transmission system to all generators for injecting  power and to any consumer to carry the power from the point of injection to his load. To augment the power supply, the Government of Tamil Nadu has also permitted third party sale of power produced by IPPs, CPPs & other private power producers through short term Intra-State open access to HT consumers within Tamil Nadu as it will provide an incentive to the generators within the State to produce to their full capacity.

பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி

கூகுள் வழங்கும் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். கூகுள் தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் பிளாக்கரின் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும் படி இருக்கும்.

உதாரணமாக 
இப்பொழுது - www.ganeshdigitalvideos.blogspot.in

உங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உருவாக்க ஒரு எளிமையான மென்பொருள் -அறிமுகம்.

உங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உருவாக்க ஒரு எளிமையான மென்பொருள் -அறிமுகம்.:
பிடித்தமான பாடல்களில் இருந்து ரிங்டோனை உருவாக்குவது சுலபம் இதற்கு தேவை ஒரு இலவச மென்பொருள் தான். ஆடேசிட்டி (Audacity) மென்பொருள் இலவச டவுன்லோடாக கிடைக்கிறது இதனை பயன்படுத்தி mp3 பாடல்களில் இருந்து விருப்பமான ரிங்டோனை கட் செய்து நுன்பேசியில் வைத்துக்கொல்லலாம் . அதுமட்டும் அல்ல மெசேஜ் டோன் கூட செய்யலாம். ஆடேசிடி மென்பொருள் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்கவும்


ஆடேசிட்டி பாடல்களை திருத்தியமைக்க பயன்படும் மென்பொருள். இதனை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோன கட் செய்வது போன்ற விவரங்கள் மென்பொருளின் உதவி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ரிங்டோன மற்றும் மெசேஜ் டோன் mp3 வடிவில் வேண்டும் என்றால் லாமே (LAME) என்கிற துணை மென்பொருள் தேவை. இதுவும் இலவச டவுன்லோடுதான். லாமேயினை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு மென்பொருட்களையும் பயன்படுத்தும் வழி முறைகள் அடுத்த பதிவுகளில் இடம் பெறும்...உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய

உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய: வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள்....மேலும் வாசிக்க...


Railway Ticket Booking Websites

Railway Ticket Booking Websites:
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

1.ClearTrip

IRCTC க்கு அடுத்த படியாக அதிகம் பேர் புக் செய்யும் தளம். மிக எளிதான வழியில் மூன்றே கிளிக்கில் டிக்கெட்டைப் புக் செய்யலாம். டிக்கெட் புக் செய்த பின்னர் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ள முடியும். இதிலும் SMS Alert வசதியிருக்கிறது. டிக்கெட்டை ரத்து செய்வதும் எளிதாகவே இருக்கிறது. மிக்குறைந்த கட்டணத்தையே இந்த இணையதளம் எடுத்துக் கொள்ளும். இதில் டிக்கெட்டைப் புக் செய்ய கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.

2.Yatra.Com/Trains

3.MakeMyTrip.Com/Railways

4.Thomas Cook.Co.In/IndianRail

5.http://www.railticketonline.com/SearchTrains.aspx

6.http://www.ezeego1.co.in/rails/index.php


ERail.in

இந்த இணையதளம் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம், தொலைவு, கட்டணம், பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும். புதியதாக டிக்கெட் புக் செய்ய சேவை இதில் இல்லையென்றாலும் வேகமாக தகவல் அறிய உதவியாக இருக்கும்.

முக்கிய குறிப்புகள் :

• இந்த இணையதளங்கள் அனைத்துமே IRCTC இணையதளத்துடன் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுகின்றன. நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும் கேன்சல் செய்தாலும் எல்லாமே IRCTC இன் தகவல்தளத்திலும் சேர்ந்துவிடும். அதனால் பயப்படத் தேவையில்லை.
• நீங்கள் எடுக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கு Train Class, Train Type, Tatkal போன்ற சேவைகளைப் பொறுத்து 10 முதல் 50 ருபாய் வரை கமிசனாகப் பிடிக்கபடும்.
• இவை எல்லாமே IRCTC ன் தகவல்தளத்தை வைத்தே செயல்படுவதால் நம்பகத்தன்மையில் பிரச்சினையில்லை. இந்த தளங்கள் அனைத்துமே IRCTC தளத்தை விட வேகமாக செயல்படுகின்றன.கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை
அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

Monday, January 30, 2012

வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். மேலும் படிக்க: வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2012/01/add-read-more-url-when-text-copied-your.html#ixzz1kxyJOJtN ஜிஎஸ்ஆர்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியையோ அல்லது ஒரு எழுத்தையோ காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.

காலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனிதர்


''அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’ - அதாவது பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை ஆகும். வள்ளுவர் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்று, குறள்மொழியையே குரல்மொழி யாகப் பகிர்கிறார் எஸ்.ராஜேந்திரன்.
 யார் இந்த ராஜேந்திரன்? 
''சார், புதுவை அரசு மருத்துவமனைக்குப் பக்கத்துல பல வருஷங்களாத் தினமும் காலையில ஒருத்தர் வந்து அங்கு இருக்கும் ஏழைகளுக்கு இலவசமா உணவுகொடுக்கிறார்'' என்று விகடன் வாசகர் கல்யாணசுந்தரம் நம் வாசகர் வாய்ஸில் பதிவுசெய்து இருந்தார். புதுவை - அரசு மருத்துவமனைக்குச் சென்றால் ஒரு கூட்டமே சுற்றிச் சூழ, எல்லோருக்கும் உணவுப்பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டு இருந்தார் ராஜேந்திரன்.
'இதை என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் பண்றேன். அதனால்தான் இதை விளம்பரப்படுத்த நான் விரும்பலை. இருந்தும் இதைப் படிச்சிட்டு பல பேர் ஏழைகளுக்கு உதவ முன் வரலாம். அதுக்காகத் தான் இதைப் பற்றிப் பேசறேன் தம்பி.

Homage to Martyrs - Observance of two minutes silence on 30.1.2012

Promotion Panel for AEE / Civil - Orders issued

SR Amendment Proceedings No 4 Dated 9.1.12, Additional Charge

Sunday, January 29, 2012

இலங்கை உற்பத்திகளுக்கு தமிழ்நாட்டில் வந்தது தடை.


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப்  பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எம்எல்ஏக்களுக்கு லேப்டாப்: முதல்வர் அறிவிப்பு

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமே மக்களாட்சி நடைபெறுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள கணினி புரட்சியின் மூலம் பல தகவல்களை  இருந்த இடத்திலிருந்து கணினியின் மூலம்  தெரிந்துக் கொண்டு, அவர்களின் பணி சிறக்க அவர்களுக்கு கணினி வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
எனவே முதல்வர் ஜெயலலிதா 11.08.2011 அன்று 2011-12 ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். மேலும் நடப்பாண்டில் சட்டமன்ற  உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி  1 கோடியே 75 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.

அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி.


தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத்தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின்
அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே

.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு
செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும்
தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க்
குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில்
படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர். அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு
செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும். அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற மக்கள் தொடர்பு மையம் : தமிழக அரசு அறிவிப்புஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மக்கள் தொடர்பு மையத்தை தொடங்கவும்,
கல்லூரி மாணவர்களுக்கு மென்பொருள் விருது போட்டி நடத்தவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

மக்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த சேவைகளை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கவும், ரூ.6 கோடி ரூபாய் செலவில் மக்கள் தொடர்பு மையம் ஒன்றினை அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மையத்தின் மூலம், மக்கள் குறை தீர்ப்பு பற்றிய விவரங்கள், அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அரசு அலுவலகங்களின் தொடர்பு விவரங்கள், சேவைகளுக்கான விண்ணப்பம் பெறுதல், மனுக்களின் தற்போதைய நிலை, மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் போன்ற மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விவரங்களும் மக்கள் தொடர்பு மையத்தின் மூலம் வழங்கப்படும்.

தனியார் செவிலியர்கள், அரசு செவிலியர்கள் போட்டி போட்டு போராட்டம் ?

தனியார் கல்லூரிகளில் படித்து, தற்போது அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் செவிலியர்கள், அரசு உத்தரவுக்கு ஆதரவாக நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலமாகச் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயை சந்தித்து, தங்களுக்கு அரசு பணி கிடைக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர். பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள், அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர்.

ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கே 16 கிலோ கோகைன் போதை பார்சல் அனுப்பி சவால் விடுத்திருக்கும் போதை கடத்தல் கும்பல் ?

ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கு 16 கிலோ கோகைன் போதை பொருள் பார்ச்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கு கடந்த 16ம் தேதி 2 பைகளில் பெரிய பார்சல் வந்தது. அவற்றின் மீது ஐ.நா. முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. பைகளை பிரித்து பார்த்த போது அவற்றில் 16 கிலோ எடையுள்ள அதிக சக்திவாய்ந்த கோகைன் போதை பொருள் இருந்தது கண்டு ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் சர்வதேச மதிப்பு 20 லட்சம் டாலர். இந்த பார்சல்களை மெக்சிக்கோ போதை கடத்தல் கும்பல் அனுப்பி சவால் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ரேஷன் கார்டுகளை கடையில் பதியாதவர்களுக்கு, பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க முடிவு ?


ரேஷன் கார்டுகளை கடையில் பதியாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கார்டுதாரர்கள் இல்லையெனில் அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகையை விட ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டு, மூன்று கார்டுகள் வைத்துள்ளனர்.

புது முறையில் பிஎஸ்என்எல் ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி ?


நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஒரே மாதிரியான முறையில் பணம் கட்டும் முறை அறிமுகப்படுத்தியதில் இருந்து வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் காத்திருந்து பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
அதனால் இந்த மாதத்திற்கான பணம் கட்டும் கடைசி தேதி பிப்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் செல்போன், தொலைபேசி வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர  கட்டணங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம், அலுவலகம் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக கட்டி வருகின்றனர். சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மூலமாகவும்,  ஆன்லைன் மூலமாகவும் பணம் கட்டுகின்றனர்.

பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்Print
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.

ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

சன் நியூஸ் புதிய தலைமுறை ராஜ் நியூஸ்சேனல்களை இனி இணையத்திலும்

சன் நியூஸ்“, “புதிய தலைமுறை” ராஜ் நியூஸ் சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை. இனி தமிழ் செய்திகள் தொலை க்காட்சிகளை தற்போதைய காலக்கட்ட‍தில் உள்ள‍ நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாக இணைய தளங்களில் நேரடியாக காண லாம். செய்திகளை அறியலாம். கீழே உள்ள‍ லிங்கை கிளிக் செய்து செய்தி அறிந்திடுக•
மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வி தை2வி ரு ட் ச ம் தளத்தில்
 சென்று பாருங்கள்
கணிணி தளம்சினிமா செய்திகள்சின்ன‍த்திரை செய்திகள்,செய்திகள்தெரிந்து கொள்ளுங்கள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  ,,,,,,

இந்தியா விவசாய நாடு .... அதன் இன்றைய நிலை.....

இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும்.

முந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.

உணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.

மோட்டார் வாகன இன்ஷூரன்ஸினால் நன்மைகள் என்ன?

‘நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே… எ

ன்னோட வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்?” என்று கேட்பவர்க ள் நிறைய! இந்த எண்ணம் தவ றானது. நீங்கள், சாலையில் நிதா னமாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே, பின்னால், முன் னால், பக்கவாட்டில் என அனைத்து திசைகளிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார் கள் என்பதற்கு எந்த உத்தரவாத மும் இல்லை.
 ர்கள் நிறைய! இந்த எண்ணம் தவ றானது. நீங்கள், சாலையில் நிதான மாகச் செல்பவராக இருக்க லாம். ஆனால் எதிரே, பின்னால், முன் னால், பக்க வாட்டில் என அனைத்து திசை களி லிருந்தும் வரும் வாகன ஓட்டிக ளும் நிதா னமாக வருவார்கள் என்பதற்கு எந்த உத் தர வாதமும் இல்லை.

Saturday, January 28, 2012

AE/Elec Internal selection Callfor letter copy

திருப்பூர் புத்தகக்கண்காட்சிபுத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.


இந்த புத்தகக்கண்காட்சியின் எனது  Face book நண்பர்  Tamil Ganesan அவர்களின் துணைவர் டாக்டர் குமார் கணேசன் அவர்களின்  "ஓர் அமெரிக்கத் தமிழனின் தேடல் சுகமானது..
எனும் கவிதை புத்தகம் அரங்கம் எண் 14 ஸ்ரீபுத்தக களஞ்சியம் மற்றும் அரங்கம் எண் 46 நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிடைக்கபெறும்


உடனே சீ.டி கேசட்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய ?

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணணியில் உள்ள டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம்.

நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை கொப்பி செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
ஒவ்வொரு கோப்பையும் நாம் வீடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான கோப்புகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில கோப்புகள் ஒழுங்காக கொப்பி ஆகியிருக்காது.

Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.


நாம் காப்பி செய்யும் சிடிகளில் அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.

எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது.

அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம்.

பென்டிரைவில் write protected பிழையை நீக்க ~ Jaffna pc

பென்டிரைவில் write protected பிழையை நீக்க ~ Jaffna pc


PROMOTION TO THE POST OF AAO

ரூ.25 லட்சம் செலவில் கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரும் பணி துவக்கம்

கோபி, ஜன. 25: ரூ.25 லட்சம் செலவில் கோபி கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 ÷கீரிப்பள்ளம் ஓடை கோபி மொடச்சூரில் இருந்து தொடங்கி சாமிநாதபுரம், வண்டிப்பேட்டை, மேட்டுவளவு, நஞ்சகவுண்டன்பாளையம் வழியாக கூகலூர் கிளை வாய்க்காலில் முடிவடைகிறது.
 ÷கோபி நகராட்சிக் கழிவுநீர் சாக்கடை வழியாக கீரிப்பள்ளம் ஓடையில் கலக்கிறது. கீரிப்பள்ளம் ஓடையை ஒட்டி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
 ÷மழைக் காலங்களில் கோபி நகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தேங்கும் தண்ணீர் கீரிப்பள்ளம் ஓடையில் கலக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்தச் சமயத்தில் ஓடையை ஒட்டி உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
 ÷எனவே, கீரிப்பள்ளம் ஓடையைத் தூர்வார வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஓடையை தூர்வார தமிழகஅரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் கீரிப்பள்ளம் தூர் வாரப் பட்டு ஆழப்படுத்தப்பட உள்ளது.
 ÷கீரிப்பள்ளம் ஓடை முடிவடையும் இடமான கூகலூர் கிளை வாய்க்காலில் தண்ணீர் கலக்கும் இடத்தில் தரை மட்டப் பாலம் உள்ளது.
 கீரிப்பள்ளம் ஓடையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாலத்தில் தண்ணீர் செல்லும் பகுதியை அடைத்துக் கொள்வதால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
 பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்குவதை தடுப்பதற்காக 3 கண் கொண்ட பாலம் 4 கண் கொண்ட பாலமாக மாற்றி கட்டப்படவுள்ளது.
 ÷இதற்கான பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார். உடன், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணீதரன் கோபி நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், கோபி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சத்தியபாமாவாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...