உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

டூவீலர் "பார்க்கிங்' கட்டணம் 10 ரூபாய்

திருப்பூர் : திருப்பூரில் உள்ள சினிமா தியேட்டர்களில் டூவீலர் "பார்க்கிங்' கட்டணம் 10 ரூபாய் வசூலிக்கப்படுவது, ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, சினிமா தியேட்டர்களில் டூவீலர்களுக்கு "பார்க்கிங்' கட்டணம், இரண்டு ரூபாய் வசூலிக்கப்பட்டது. பின், 3 ரூபாய், அடுத்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக, 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; இதுவே, கார்களுக்கு 20; சைக்கிள்களுக்கு 3.அதிகபட்சமாக இரண்டரை மணி நேரம் மட்டுமே, வாகனங்கள், தியேட்டர் நிர்வாக பாதுகாப்பில் உள்ளன. அதற்கு 10 ரூபாய் கட்டணம் என்பது அதிகபட்ச கட்டணம். "டிவிடி' புழக்கத்தால், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நஷ்டத்தை ஈடுசெய்ய, டூவீலர் "பார்க்கிங்' கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக தியேட்டர் உரிமையாளர் தரப்பில் காரணம் கூறப்படுகிறது; கேண்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்கள், குளிர்பானங்களின் விலை உயர்வுக்கும் இதே காரணம் கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை தினங்கள் மற்றும் முன்னணி நடிகர், இயக்குனர்களின் படங்கள் ரிலீசாகும்போது, தியேட் டர்களில் கூட்டம் அதிகமாகவே உள்ளது; "ஹவுஸ் புல்' காட்சிகளாக, பல நாட்களுக்கு படம் திரையிடப்படுகிறது. நூற்றுக்கணக்கான டூவீலர்கள் "பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் போது, தியேட்டர் நிர்வாகத்துக்கு இரட்டிப்பு லாபம் கிடைக் கிறது. முதல்தர வசதியுள்ள தியேட்டர்களில் அதிகபட்சமாக 50 ரூபாய், நடுத்தரமான வசதியுள்ள தியேட்டர்களில் அதிகபட்சமாக 30 ரூபாய் என்ற கட்டண கட்டுப்பாடுகளை, பெரும்பாலான தியேட்டர்களில் பின்பற்றுவது இல்லை. கட்டண வசூலில் முறைகேடு: பொங்கலுக்கு ரிலீஸ் படங்கள் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில், ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளில், 20, 30 ரூபாய் என அச்சடித்திருந்தாலும், வசூலிக்கப்பட்ட தொகை 50, 75 ரூபாயாக இருந்தது. இம்முறைகேட்டால் அரசுக்கு செலுத்த வேண்டிய, பல லட்சம் ரூபாய் கேளிக்கை வரி ஏய்ப்பு நடந்துள்ளது. அதிகாரிகள் கவனித்து "நியாயமான' நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...