உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கே 16 கிலோ கோகைன் போதை பார்சல் அனுப்பி சவால் விடுத்திருக்கும் போதை கடத்தல் கும்பல் ?

ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கு 16 கிலோ கோகைன் போதை பொருள் பார்ச்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கு கடந்த 16ம் தேதி 2 பைகளில் பெரிய பார்சல் வந்தது. அவற்றின் மீது ஐ.நா. முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. பைகளை பிரித்து பார்த்த போது அவற்றில் 16 கிலோ எடையுள்ள அதிக சக்திவாய்ந்த கோகைன் போதை பொருள் இருந்தது கண்டு ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் சர்வதேச மதிப்பு 20 லட்சம் டாலர். இந்த பார்சல்களை மெக்சிக்கோ போதை கடத்தல் கும்பல் அனுப்பி சவால் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

போதை கடத்தல் கும்பலுடன் ஐ.நா.வில் பணியாற்றும் அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது. இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நிசிர்கி கூறுகையில், வழக்கமாக ஐ.நா.வுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் ஸ்கேன் செய்த பிறகே பிரித்து பார்க்கப்படும். அப்படி பார்த்த போதுதான் 2 பார்சல்களில் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சல் மெக்சிக்கோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. 

சின்சினாட்டியில் உள்ள டிஎச்எல் மையத்தில் இருந்து கப்பலில் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அனுப்பியவர் முகவரி இல்லை என்றார். ஐ.நா. அலுவலகத்துக்கே போதை பார்சல் வந்துள்ளது, உறுப்பு நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...