உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 28, 2012

ரூ.25 லட்சம் செலவில் கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரும் பணி துவக்கம்

கோபி, ஜன. 25: ரூ.25 லட்சம் செலவில் கோபி கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 ÷கீரிப்பள்ளம் ஓடை கோபி மொடச்சூரில் இருந்து தொடங்கி சாமிநாதபுரம், வண்டிப்பேட்டை, மேட்டுவளவு, நஞ்சகவுண்டன்பாளையம் வழியாக கூகலூர் கிளை வாய்க்காலில் முடிவடைகிறது.
 ÷கோபி நகராட்சிக் கழிவுநீர் சாக்கடை வழியாக கீரிப்பள்ளம் ஓடையில் கலக்கிறது. கீரிப்பள்ளம் ஓடையை ஒட்டி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
 ÷மழைக் காலங்களில் கோபி நகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தேங்கும் தண்ணீர் கீரிப்பள்ளம் ஓடையில் கலக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்தச் சமயத்தில் ஓடையை ஒட்டி உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
 ÷எனவே, கீரிப்பள்ளம் ஓடையைத் தூர்வார வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஓடையை தூர்வார தமிழகஅரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் கீரிப்பள்ளம் தூர் வாரப் பட்டு ஆழப்படுத்தப்பட உள்ளது.
 ÷கீரிப்பள்ளம் ஓடை முடிவடையும் இடமான கூகலூர் கிளை வாய்க்காலில் தண்ணீர் கலக்கும் இடத்தில் தரை மட்டப் பாலம் உள்ளது.
 கீரிப்பள்ளம் ஓடையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாலத்தில் தண்ணீர் செல்லும் பகுதியை அடைத்துக் கொள்வதால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
 பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்குவதை தடுப்பதற்காக 3 கண் கொண்ட பாலம் 4 கண் கொண்ட பாலமாக மாற்றி கட்டப்படவுள்ளது.
 ÷இதற்கான பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார். உடன், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணீதரன் கோபி நகர்மன்றத் தலைவர் ரேவதிதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், கோபி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சத்தியபாமாவாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...