உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 06, 2012

திருப்பூரில் முறைகேடாக இயங்கிய 26 சாய ஆலைகளுக்கு "சீல்':                                      
முறையான அனுமதியின்றி, ரகசிய இடங்களில் இயங்கிய 26 சாய ஆலைகளுக்கு அதிகாரிகள் நேற்று "சீல்' வைத்தனர். திருப்பூரில் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் சாய ஆலைகள் வெளியிடும் கழிவு நீரால் நொய்யல் ஆறு மாசுபட்டது. விவசாயிகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் திருப்பூரில் செயல்படும் சாய ஆலைகளை மூட உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவைப் பட்டறைகளை மூடி, "சீல்' வைக்க கடந்தாண்டு ஜனவரியில் உத்தரவிடப்பட்டது. பிப்., மாதம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதன்பின்பும் சில ஆலைகள் தொடர்ந்து இயங்கியதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து ஆலைகளையும் மூடி "சீல்' வைத்தது. தற்போது, மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற்று, சோதனை ஓட்டத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனுமதி பெறாமல் ரகசிய இடங்களில் இயங்கிய சிறிய மற்றும் வீடுகளில் வைத்து இயங்கிய சாய ஆலைகள் குறித்து அரசின் கவனத்துக்கு தகவல் சென்றது. சிறிய விஞ்ச் மூலம், சாம்பிள் துணிகள், பட்டன் மற்றும் ஜிப் போன்றவற்றுக்கு சாயம் ஏற்றும் பணியில் இவை ஈடுபட்டிருந்தன. அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 26 சிறிய சாய ஆலைகள் கண்டறியப்பட்டன. லட்சுமி நகர், அங்கேரிபாளையம், எஸ்.வி.காலனி, தாராபுரம் ரோடு, கொங்கு மெயின் ரோடு, சந்தைப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவை ரகசிய இடங்களில் இயங்கி வந்தன. இது குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த ஆலைகளுக்கு, இயக்கத்தை நிறுத்த அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. எச்சரிக்கை நோட்டீசைப் பெற்ற பின்பும், ஆலைகள் தொடர்ந்து இயங்கின, உடனே, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பறக்கும் படை செயற்பொறியாளர் மலையாண்டி, திருப்பூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பாபு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று சென்று, மீண்டும் இயங்காத வகையில் மூடி "சீல்' வைத்தது. அப்போது, சில சாய ஆலைகள் ஜெனரேட்டர் மூலம் சாயமிடும் பணி நடந்ததை பார்த்து, அதிகாரிகள் குழு அதிர்ச்சி அடைந்தது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...