உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

நவீன நம்பர் பிளேட் திட்டம் மாநில அரசுகளுக்கு மார்ச் 31 இறுதிகெடு


புதுடெல்லி : வாகனங்களில் முறைகேடு செய்ய முடியாத உயர் பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இறுதிகெடு விதித்துள்ளது. வாகன நம்பர் பிளேட்களில் முறைகேடு செய்யப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு பல்வேறு வகையில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை தடுக்க, முறைகேடு செய்ய முடியாத உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்த உத்தரவுவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்தை அமல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு பலமுறை கெடு விதித்தது. கடைசியாக கடந்த டிசம்பர் 8க்குள் அமல்படுத்த வாய்ப்பு அளித்தது. ஆனால், எந்த மாநில அரசும் இதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ‘இந்த திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குள் மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். இதுதான் கடைசி கெடு. அதற்குள் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கபாடியா எச்சரித்தா

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...