உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 16, 2012

புயல் நிவாரண நிதி ரூ.8 கோடி வழங்கும் மின் ஊழியர்கள்

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மக்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.8 கோடி வழங்க மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் சமீபத்தில் வீசிய தானே புயல் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை யை புரட்டிப்போட்டுள்ளது.

மின்சாரம், சாலைப் போக்குவரத்து, குடிநீர் போன்றவைகள் முழுவதுமாக பாதிப்படைந்துள் ளன. விவசாய விளைபொருட்கள் முற்றிலுமாக சேத மடைந்துள்ளன. நகரத்தைவிட கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, கிராமப்புற மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இவைகளை யெல்லாம் சரி செய்து புனரமைக்க பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு உதவிக் கரம் நீட்டும் வகையில் மின்வாரிய ஊழியர்கள் தங் களது ஒருநாள் ஊதியத்தை சுமார் 8 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிப்பதோடு, முற்றிலுமாக பழுதடைந்துள்ள மின்பாதைகளை சரிசெய்து, மின் இணைப்பை இழந்துள்ள இரு மாவட்ட மக்களுக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்குவது என்றும், மின்வாரிய தொழிற்சங்கங்களான சிங்கார ரத்தின சபாபதி (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), எஸ். எஸ்.சுப்பிரமணியன் (தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பு- சிஐடியு), வி.ராமச்சந்திரன் (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), எஸ்.வி.அங்கப்பன் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), டி.வி.சேவி யர் (மின்வாரிய ஐஎன்டியுசி சங்கம்), ஆர். பத்ரி நாதன் (பொறியாளர் சங்கம்), அரிராம் (மின் ஊழி யர் காங்கிரஸ்), கே.ஜி.சுவாமி (அம்பேத்கர் எம்ப்ளா யிஸ் யூனியன்), பிரகாஷ் (அட்டைப்பட்டியல் பணியா ளர் சங்கம்), மோகன் (பண்டகசாலை பணியாளர் சங்கம்), ஆர்.தயாளன் (ஊர்தி ஓட்டுநர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு வாரியத்திற்கு அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...