உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 01, 2012

தானே' புயலால் திருப்பூர் மாவட்டத்தில் 87.8 மி.மீ., மழை


வங்க கடலில் கிளம்பிய "தானே' புயலால், திருப்பூர் மாவட்டத்தில் 87.8 மி.மீ., மழை அளவு பதிவானது.
வங்க கடலில் ஏற்பட்ட "தானே' புயல் நேற்று முன்தினம் புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையை கடந்தது; சேலம் பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக திருப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு லேசான தூறல் மழை பெய்தது. தட்ப வெப்ப நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, குளிர் 17 டிகிரி செல்சியஸ் அளவாக இருந்தது. புயலால் ஏற்பட்ட இம்மழை நேற்று பகல் முழுவதும் நீடித்தது. அதிகாலை முதல் பிற்பகல் வரையில் மழை தொடர்ந்து பெய்தது. நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; தொடர்ந்து பெய்த சாரல் மழையால் ரோடுகள் ஈரமாக காட்சியளித்தன. இதனால் வாகனங்கள் வேகமாகச் செல்வது தடைபட்டு, சில இடங்களில் வாகன நெரிசல் காணப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று மொத்தம் 87.8 மி.மீ., அளவு மழை பதிவானது. மாவட்ட அளவில் தாராபுரத்தில் அதிகமாக 20 மி.மீ., உடுமலையில் குறைந்த அளவாக 7 மி.மீ., மழை பதிவானது. அவிநாசியில் 13 மி.மீ.,; பல்லடத்தில் 10 மி.மீ.,; திருப்பூரில் 11 மி.மீ.,; மூலனூரில் 14 மி.மீ., மற்றும் காங்கயத்தில் 12.8 மி.மீ., என மழையளவு பதிவானது.
அமராவதி அணைப் பகுதியில் 13 மி.மீ.,; திருமூர்த்தி அணையில் 13.5 மி.மீ., ; நல்லாறில் 9.5 மி.மீ., மற்றும் உப்பாறு அணையில் 12 மி.மீ., அளவில் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 87.8 மி.மீ., மற்றும் சராசரி மழை அளவு 12.5 மி.மீ.,க்கு பதிவானது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...