உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 20, 2012

சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரும் மின் விண்ணப்பத்திற்கு இன்னமும் 98,000 ஒப்பங்கள் தேவை

சர்வதேச சுயாதீன விசாரணை. இலங்கை தீவில் நடை பெற்ற போர்க்குற்றம் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்த பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக 
உலகத் தமிழர் பேரவையினரால் ஏற்படுத்தப்பட்ட மின் விண்ணப்பம் அதன் இலக்கை அடைய இன்னமும் 98,000 கை ஒப்பங்களை பெறவேண்டியுள்ளது. 2011 டிசம்பர் 8ம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூடிய அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றினைந்து சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையை (http://www.iiicampaign.com) இணைந்து முன்னெடுப்பதென கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. 

சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையின் ஒரு அம்சம் பிரித்தானிய அரசின் இணையத்தில் பதியப்பட்டுள்ள மின் விண்னப்பமாகும். http://epetitions.direct.gov.uk/petitions/14586மின் விண்ணப்பத்தின் முக்கியத்துவம்- மக்கள் தமது விருப்பங்களை அரசுக்கு தெரிவிக்கும் முகமாகவே மின்விண்ணப்பம் உருவாக்கப்படுகின்றது. ஒரு லட்சம் கை ஒப்பங்கள் கிடைக்கப்பெறும் போது அது பாராளுமன்ற விவாவத்திற்க்கு உரித்துடையதாகும் இது ஒரு மாபெரும் ஊர்வலத்துக்கு சமமானது. - சிறிலங்கா அரசு , தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு விசாரணையை கேட்கவில்லை என்றும் அவார்கள் தாம் (சிறிலங்கா) போரில் வென்றதை கொண்டாடுகிறார்கள் என்றும் பரப்புரை செய்கின்றது அவ்வாறான பிரச்சாரத்தை முறியடிக்க இவ்வாறான மின் ஒப்பம் பெரிதும் உதவுகின்றது.

பிரித்தானிய அரசின் பிரதிநிதிகளும் கொள்கை வகுப்பாளர்களும் இந்த மின் விண்ணப்பத்தை உன்னிப்பாக கவனிப்பார்கள்- முன்னரும் இவ்வாறான பல மின் விண்ணப்பங்கள் பிரித்தானியானியாவில் வெற்றி பெற்றுள்ளது. காணொளி விளக்கம் http://www.iiicampaign.com என்னும் இணையத்தில் இந்த மின் ஒப்பத்தை நீங்கள் காணலாம் http://iiicampaign.com/welcome/e-petition . இதனை எவ்வாறு செய்வது என்னும் விளக்கைத்தை இங்கே நீங்கள் இணைக்கப்பட்ட காணொளியில் நீங்கள் காணலாம்.நீங்கள் அரச இணையத்தில் பதியும் உங்கள் தரவுகள் எவையும் வெளியிடப்பட மாட்டாது. நீங்கள் பிரித்தானிய அரசின் இணையத்தில் பதியும் எந்த தரவையும் அவர்கள் வெளியிட்டமாட்டார்கள் முதலில் நீங்கள் மின் விண்னப்பத்தில் கை எழுதிடுங்கள். அதனோடு உங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் உங்கள் கருத்தை எழுதுங்கள். அதற்கான இணைப்பையும் இங்கே தருகின்றோம் . http://iiicampaign.com/welcome/uk-mps உங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நீங்கள் தரும் அழுத்தம் அவரை பாராளுமன்றத்தில் உங்கள் விருப்பத்தை பிரதி பலிக்கத் தூண்டும். 

அதுமட்டுமல்லாமல் ஒரு லடசம் கையெழுத்து கிடைத்த பின்னர் நடை பெறுகின்ற பாராளுமன்ற விவாதத்தில் உங்கள் குரலாக உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொல்வதற்க்கு இது வழிவகுக்கும்.தமிழரின் பலம்.ஏறக்குறைய 3 லட்சம் தமிழ் மக்கள் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள் லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் 50,014 வாக்குகள் தமிழ் மக்களுக்கு சார்பாக பதிந்தது. அது லண்டனுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது ஆனால் இந்த மின் விண்ணப்பத்தில் பிரித்தானியாவிலுள்ள அனைவரும் பங்கேற்கலாம். இந்த மின் விண்ணப்பத்தில் நீங்கள் கை ஒப்பம் இடுவதோடு தமிழர் அல்லாத ஐவரை உங்களால் இதில் பங்கெடுக்க வைப்பீர்களானால் இந்த போராட்டம் மற்றைய சமூகத்திற்கும் எடுத்துச் செல்லப்படும். உங்கள் நண்பரையும் உங்களுக்காக குரல் கொடுக்க வையுங்கள்.
Popout

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...