உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 03, 2012

திருப்பூர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு


  திருப்பூர் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது; வங்கிகளில் வழங்கப் படும் ரூபாய் நோட்டு கட்டுகள் மற்றும் ஏ.டி.எம்., மெஷின்களிலும் கள்ள நோட்டுகள் வருவதால், இதனை கட்டுப்படுத்த வங்கி
களும், போலீசாரும் தீவிர
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த நகரமாக இருப்பதால், தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் நடக்கிறது. பண பரிவர்த்தனை தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூரில் பல்வேறு வங்கிகளின் 120 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன.
தொழில்நகரமாக உள்ளதாலும், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ள நோட்டுகளில் பெரிய அளவிலான வித்யாசம் கண்டு
பிடிக்க முடியாத நிலையில்,
தொழிலதிபர்கள், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் இல்லாததால் கள்ள நோட்டுகள் புழக்கம் சகஜமாக உள்ளது. நூறு தாள்களில் குறைந்தபட்சம் 5 தாள்கள் வரை கள்ள நோட்டுகள் உள்ளன.
பொதுமக்கள் தரப்பிலும், நிறுவனங்கள், வங்கிகளில் கள்ள நோட்டுக்களை தனியாக பிரித்து, இது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள யாரும் தயாராக இல்லை. கள்ளநோட்டுகள் குறித்து கண்டு கொள்ளாமல், அலட்சியப்படுத்துகின்றனர்.
தனிநபர்களிடமிருந்து கள்ள நோட்டுகள் வரும் போது தவறாக கருதிய நிலையில், தற்போது வங்கிகளில் வழங்கப்படும் ரூபாய் நோட்டு கட்டுகள் மற்றும் ஏ.டி.எம்., மெஷின்களிலும் கள்ள நோட்டுகள் வருகின்றன.
கண்காணிக்க வேண்டிய வங்கி அதிகாரிகளும் இதுகுறித்து கண்டு கொள்வதில்லை. இதனால் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.
கள்ள நோட்டு கண்டு பிடிக்க "யு.வி., லேம்ப்' மெஷின் உள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த வசதி இல்லை; தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் வரும் நிலையில், ஒவ்வொன்றையும் தனித்தனியாக இந்த மெஷினில் வைத்து ஆய்வு செய்வதும் இயலாததாக உள்ளது.
வங்கிகளில் கண்டறியும் மெஷின்கள் இருந்தாலும், வங்கிகளுக்கு தகுந்தவாறு பல ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளை ஒரு சில மணி நேரங்களில் கள்ள நோட்டு, நல்ல நோட்டு என ஒரு சில அலுவலர்களால் தரம் பிரிக்க முடியாத நிலை உள்ளது.
எண்ணும் போதே கள்ள நோட்டுக்களை தரம் பிரிக்கும் "சார்ட்டிங் மெஷின்' உள்ளது. நூற்றுக்கணக்கான வங்கிகள், பணம் புரளும் தனியார் நிறுவனங்கள் இருந்தாலும் திருப்பூரில் இந்த மெஷின்கள் ஐந்து என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. இதனால், கள்ளநோட்டு புழக்கம் என்பது திருப்பூரில் சகஜமாகி வருகிறது.
வங்கிகளில் கள்ளநோட்டை கண்டுபிடித்தாலும் இது குறித்து பெறப்பட்ட நபரின் பெயரை பதிவு செய்து, போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஒரு நாளில் பலரிடம் கை மாறும் கள்ள நோட்டுகள், எங்கிருந்து வந்தது என கண்டறிய முடிவதில்லை.
இப்பிரச்னையில் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபாலிடம் கேட்ட போது, "" கள்ள நோட்டுகள் வருவதை வங்கிகள் கண்காணிக்க வேண்டும். கள்ள நோட்டுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, வந்தால் அவற்றை உடனடியாக தனியாக பிரித்து, போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.
தாள்களை எண்ணும்போதே கள்ள நோட்டுகளை கண்டறியும் மெஷினை அனைத்து வங்கிகளும் வாங்கவும், அதனை முறையாக பயன்படுத்தவும் வேண்டும். கேஷியர்கள் அனுபவம் மிக்கவர்களாக இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
போலீசில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கை இருப்பதால், யாரும் ஒதுங்கிக்கொள்ள கூடாது. கள்ளநோட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க, அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்படும்.'' என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...