உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 16, 2012

"பறக்காத' பறக்கும் பாலம் திட்டம்; ஆமையாய் நகரும் பணி


திருப்பூர் : திருப்பூரில் அபரிமிதமாக உள்ள வாகன போக்குவரத்தை சமாளிக்க, ரூ.70 கோடியில் பறக்கும் பாலம் திட்டம் கொண்டு வரப்பட்டது; அத்திட்ட பணிகள், ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.

திருப்பூரில் தினமும் நான்கு லட்சம் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில், இரு சக்கர மற்றும் கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் 2.5 லட்சம். லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் 1.5 லட்சம். தினமும் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு போக்குவரத்து அலுவலகங்களில் மட்டும் 2,500 வாகனங்கள் வரை புதிதாக பதிவுக்கு வருகின்றன.

சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. திருப்பூரில் வாகன போக்குவரத்துள்ள அளவிற்கு, போக்குவரத்துக்கு பயன்படும் ரோடுகள் ஏற்றவையாக இல்லை. மிகவும் குறுகலான ரோடுகளாக உள்ளதோடு, சாலை சந்திப்புகள் அதிகளவு உள்ளன. மேலும், புறநகரின் முக்கிய ரோடுகள் நகரின் மையத்தில் அமைந்துள்ளன. இதனால், ரோடுகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது.


திருப்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பறக்கும் பாலம் அமைக்க கடந்தாண்டு திட்டமிடப்பட்டது. தென்னம்பாளையத்தில் துவங்கி, நொய்யல் ஆற்றை ஒட்டி கஜலட்சுமி தியேட்டர் வரை அமையும் வகையில் ரூ.70 கோடியில் பறக்கும் பாலம் திட்டம் வடிவமைக்கப்பட்டது. மேலும், பழைய பஸ் ஸ்டாண்ட் தாராபுரம் ரோடு அருகே ஒரு பகுதியில் இறங்கும் வகையில் பிரிவு பாலம் அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம், காமராஜர் ரோடு, குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய ரோடுகளை பயன்படுத்தும் வாகனங்கள், பறக்கும் பாலத்தை பயன்படுத்தி நேராக செல்லவும், ஒரே பகுதியில் அடுக்கு ரோடுகளாக இரண்டு ரோடுகள் அமையும்போது வாகனங்கள் எளிதாக செல்லவும், நெரிசல் தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்படும். மேலும், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசலும் குறையும்.

திட்டம் வடிவமைக்கும்போது, 43 கோடி ரூபாய் திட்ட என மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பணிகள் துவங்குவது 
இழுபறியானதால், திட்ட மதிப்பீடு 57 கோடி ரூபாயாக உயர்ந்து, தற்போது, 70 கோடி ரூபாய் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் திட்டம் அடிக்கல் நாட்டு விழா மட்டுமே கொண்டாடப்பட்டது. திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் கூட துவங்காத நிலை இருந்தது. சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் அரசு மாற்றம் ஆகிய காரணங்களால், பறக்கும் பாலம் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

தற்போது, பறக்கும் பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன. பறக்கும் பாலத்திற்கு பில்லர்கள் அமையவுள்ள இடங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தென்னம்பாளையம் பிரிவு முதல் நொய்யல் ஆறு வரை உள்ள பகுதிகளில் பாலம் அமைக்கவும், பாலம் இறங்கும் பகுதிகளில் தேவையான நிலம் கையகப்படுத்த சர்வே பணிகள் நடந்து, தற்போது 80 பேரிடம் நிலம் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பாலம் அமைப்பதற்கான மண் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ரோடுகளின் ஓரம் மற்றும் பாலம் இறங்கும் பகுதிகளில் தேவையான நிலம் கையகப்படுத்தும் வகையில் 80 பேருக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பாலம் அமைக்க டெண்டர் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெண்டர் விட்டு, பணிகள் துவங்கினால் இரண்டு ஆண்டுகளில் பறக்கம் பாலம் போக்குவரத்திற்கு தயாராகும்,' என்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...