உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 13, 2012

மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை


அவிநாசி, ஜன. 12: அவிநாசி அருகே சேவூர், கானூர், கந்தம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, அவிநாசி மின்வாரிய அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

 சேவூர், கானூர் ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த விவசாயிகள் 20 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி டிச. 4ம் தேதி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், தினமும் 3 மணி நேரம் தான் மும்முனை மின்சாரம் உள்ளதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருதாகவும், இருமுனை மின்சாரத்தில் மின் மோட்டார்களை இயக்கினால் பாதிப்புகள் அதிகமாவதாலும் உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர்.
 இதற்கிடையே, இருமுனை மின்சாரத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
 ÷இதனால் சேவூர், கானூர், கந்தம்பாளையம், ஆண்டிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, அவிநாசி மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
 எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு சில துணை மின்நிலையங்களில் முழு நேரமும் மும்முனை மின்சாரம் உள்ளது. அதுபோல எங்கள் பகுதிக்கும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் வழங்கும் வரை விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தளர்த்த வேண்டும். இரவு நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்காமல் பகலில் வழங்க வேண்டும் என்றனர்.
 ÷இதையடுத்து திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.நிர்மலதா, அவிநாசி செயற்பொறியாளர் இரா.பொன்மூர்த்தி ஆகியோர் கூறியது:
 இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளும் எங்களுக்கு ஒத்துழைப்புத் தரும் வகையில் இரவு 6 மணி முதல் 10 மணி வரை மின் மோட்டார்களை இயக்காமல் இருக்க வேண்டும்.
 இதுபோன்ற உபயோகிப்பால் மின்மாற்றி பழுதடைந்து, உரிய முறையில் மின் விநியோகம் செய்ய முடியாமல் போகிறது. இருமுனை மின்சாரத்தில் விசைத்தறிகளையும் இயக்காமல் இருக்க வேண்டும். விரைவில் இப்பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...