உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற மக்கள் தொடர்பு மையம் : தமிழக அரசு அறிவிப்புஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மக்கள் தொடர்பு மையத்தை தொடங்கவும்,
கல்லூரி மாணவர்களுக்கு மென்பொருள் விருது போட்டி நடத்தவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

மக்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த சேவைகளை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கவும், ரூ.6 கோடி ரூபாய் செலவில் மக்கள் தொடர்பு மையம் ஒன்றினை அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மையத்தின் மூலம், மக்கள் குறை தீர்ப்பு பற்றிய விவரங்கள், அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அரசு அலுவலகங்களின் தொடர்பு விவரங்கள், சேவைகளுக்கான விண்ணப்பம் பெறுதல், மனுக்களின் தற்போதைய நிலை, மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் போன்ற மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விவரங்களும் மக்கள் தொடர்பு மையத்தின் மூலம் வழங்கப்படும்.


இந்த மையத்தினை நாடு முழுவதிலும் இருந்தும் தொடர்புகொள்வதற்கு ஒரே தொடர்பு எண் வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் எந்த இடத்திலிருந்தும், இந்த தொடர்பு எண் மூலம் அனைத்து விவரங்களையும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, "மின் ஆளுமைக்கான முதல்-அமைச்சரின் உயரிய விருது'' எனும் பெயரில் செல்லிடைப்பேசி தொழில்நுட்பத்தை கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமையான பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், நரம்பியல் வலையமைப்பை கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும் என மூன்று பிரிவுகளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 18 வயதினை கடந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும், அதிகபட்சம் எட்டு பேர் கொண்ட ஒரு குழு மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

வெற்றியாளர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கான ரொக்கப்பரிசும், ரூ.15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கோப்பையும் வழங்கப்படும்..

அரசின் இந்த நடவடிக்கைகள் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். இதனால், அதிக அளவில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய மென்பொருள்கள் இனி வருங்காலங்களில் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம் என அச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...