உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 14, 2012

திருப்பூரில் தடையை மீறி பாரத் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்ட

திருப்பூர்: திருப்பூரில் தடையை மீறி பாரத் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பாரத் கேஸ் நிறுவன ஏஜென்சி செயல்பட்டு வருகின்றது. அந்த ஏஜென்சி ஆட்கள் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்ய மாதக் கணக்கில் தாமதப்படுத்துவதோடு, சிலிண்டர் வேண்டும் என்றால் மாவு, பிஸ்கட், சோப்பு, ஊறுகாய் என மளிகை பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

மேலும் அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ.50 வரை கூடுதலாக வசூலித்து வருவதாக இந்த நிர்வாகத்தினர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் அந்த ஏஜென்சி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடக்கு மாநகர கமிட்டி சார்பில் ஆர்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

தடையையும் தாண்டி மாநில தலைவர் அமிர்தம், மாவட்ட துணை தலைவர் விஜியா, வடக்கு மாவட்ட செயலாளர் வளர்மதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஏஜென்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...