உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

திருப்பூர் சாமுண்டிபுரத்தில் விளையாட்டு விழா


அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகர ம.தி.மு.க., சார்பில் 16ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா, சாமுண்டிபுரத்தில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, 250 பெண்கள் பொங்கல் வைத்தனர்; பொங்கல் வைக்க தேவையான அடுப்பு, பானை, தட்டு, கரண்டி, அரிசி, வெல்லம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கட்சி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன. குழுக்கல் முறையில் 16 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், லெமன் ஸ்பூன், மியூசிக் சேர், பெரியவர்களுக்கு உரி அடித்தல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பார்வையாளர்களில் 16 பேர், குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது; முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக வாசிங் மெஷின், மூன்றாம் பரிசாக கிரைண்டர், நான்காம் பரிசாக ஐந்து நபருக்கு மிக்ஸி, ஐந்தாம் பரிசாக நான்கு நபருக்கு எலக்ட்ரிக்கல் ஸ்டவ், ஆறாவது பரிசாக நான்கு நபருக்கு பித்தளை பொங்கல் பானை வழங்கப்பட்டது. நகர செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில அவை தலைவர் துரைசாமி பரிசு வழங்கினார். மாநகர செயலாளர் சிவபாலன், நகர அவை தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...