உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

நம்மூர்க்காரர்கள் போல ஆங்காங்கு தொங்கி கொண்டு, நெரிசலில் சிக்கியவாறு, ஜல்லிக்கட்டை ரசித்த வெளிநாட்டு பயணிகள் ?


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலம். இதை பார்க்க வெளிநாட்டு பயணிகள் முகாமிடுவர். இந்தாண்டும் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் மதுரை வந்துள்ளனர். இவர்களில் சிலர் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ரசித்தனர். அவர்களின் கமெண்ட்...


*ஜூடி, ஆசிரியர், கலிபோர்னியா: ஜல்லிக்கட்டு..."ரியலி இட்ஸ் திரில்'... இதுகுறித்து படித்துள்ளேன். நேரடியாக பார்க்க மதுரை வந்தேன். இத்தகைய விளையாட்டை பார்த்தது இல்லை. மாடுகளை அடக்குவோர், தூக்கி வீசப்பட்டாலும் மீண்டும் களத்தில் இறங்கி மாடுகளை பிடிப்பது "பைன்'.


*ஜான், ஆசிரியர், கலிபோர்னியா: இங்கு ஒரே நிமிடத்தில் தந்திரமாக, வீரத்துடன் மாடுகளை அடக்கி பரிசை பெறுகின்றனர். அலங்காநல்லூருக்கும் செல்ல உள்ளேன். இந்த விளையாட்டு பார்க்க பிரமிப்பாக உள்ளது.வெளிநாட்டு பயணியருக்கு போதிய வசதிகள் செய்யப்படாததால், நம்மூர்க்காரர்கள் போல ஆங்காங்கு தொங்கி கொண்டு, நெரிசலில் சிக்கியவாறு, ஜல்லிக்கட்டை ரசித்தனர்.

"காளைகள்' கலக்கிய ஜல்லிக்கட்டு* அவனியாபுரத்தில் கோலாகலம்
மதுரை:பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்வாக, பாரம்பரிய விளையாட்டாக தொடரும் ஜல்லிக்கட்டு, அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு நடுவில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.

ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி பிராணிகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்தது. ஜல்லிகட்டு இந்தாண்டு நடக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்த மாடுபிடிவீரர்கள் நேற்று அவனியாபுரத்தில் உற்சாகத்துடன் களம் இறங்கினர்.
கலெக்டர் சகாயம், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மத்திய பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் தலைமையில் ஜல்லிக்கட்டு துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் நாட்டாமைகளின் மாடுகள் களம் இறங்கின. இவற்றை வீரர்கள் பிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது.

அதன் பின் தொடர்ச்சியாக 260 மாடுகள் களத்தில் இறங்கின.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாடுகள் பங்கேற்றன. சீருடை அணிந்த வீரர்கள் மட்டும் மாடுகள் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரிரு வீரர்கள் மட்டும் மாடுகளை பிடிக்க முயன்று காயமுற்றனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வழக்கம் போல் மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

மாடுகள் எண்ணிக்கைகுறைவு:கடந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 324 மாடுகள் பங்கேற்றன. இந்தாண்டு 260 மாடுகள் பங்கேற்றன. அரசு "கெடுபிடிகளும்' அதிகம் இருந்தன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளை பதிவு செய்ய துணை கலெக்டர் தலைமையில் 12 வருவாய் அலுவலர்கள், மாடுகளுக்கு மருத்துவ சோதனை செய்ய கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் தலைமையில் 15 டாக்டர்கள், 20 நர்ஸ், 10 அலுவலர்கள் மற்றும் மருத்துவக்குழு, 5 ஆம்புலன்ஸ், தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். உரிய சான்றிதழ்கள் இல்லாத 50 மாடுகள், மருத்துவ பரிசோதனையில் தகுதியற்ற 20 மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன.

மேடை சரிந்தது: ஜல்லிக்கட்டை பார்க்க விழாக்குழு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாடுகளை அழைத்து வரும் பகுதியில் வாடிவாசல் மேடை, விழா அமைப்பாளர்கள் மேடை, வி.ஐ.பி.,க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தனி மேடைகள் அமைக்கப்பட்டன. பத்திரிகையாளர்களுக்கான மேடை பலம் இன்றி சரிந்தது. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...