உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

பென்னிகுக் பிறந்த நாளை, தேனி மாவட்ட மக்கள் தங்கள் வீட்டு பொங்கல் விழாவாக கொண்டாடினர் ?


தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையை, இங்கிலாந்தை சேர்ந்த பென்னிகுக் கட்டினார். இவரது 171 வது பிறந்த நாளை, தேனி மாவட்ட மக்கள் தங்கள் வீட்டு பொங்கல் விழாவாக கொண்டாடினர். கூடலூரில் இளைஞர் அணியினர் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தினர். ஓவியப்போட்டிகளில் பென்னிகுக் படம் அதிகமாக பங்கு வகித்தது. பென்னிகுக் படத்திற்கு பாலாபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடத்தினர்.


சேவல் சண்டை: பாலார்பட்டியில் நடந்த விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட 18 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற வெற்றுக்கால் சேவல் சண்டை நடந்தது. கர்னல் பென்னிகுக் எழுச்சி பேரவை ஏற்பாட்டை செய்திருந்தது.பொங்கல்: கம்பம் பள்ளத்தாக்கு கிராமங்கள், பொங்கல் விழாவை கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுருளிபட்டி மக்கள் ஊர்வலம் நடத்தி, முல்லைபெரியாற்று பாலம் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர்.பல ஊர்களில் பென்னிகுக் பெயரில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...