உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 20, 2012

இரண்டு கி.மீ தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யலாம் : வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு


வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமராவை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூர் மாணவர் கண்டு பிடித்துள்ளார்.
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் நாகராஜ். பிடிஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பிரத்யேக சாப்ட்வேரின் துணையுடன் வாகன விபத்துக்களை தடுக்கும் கருவியை நாகராஜ் கண்டு பிடித்துள்ளார். மேலும், காரை சுற்றிலும் 60 நாட்களாக நடந்த நிகழ்வுகளையும் இந்த கருவி பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. மாணவர் நாகராஜ் கூறியதாவது:

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது. எனவே, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விபத்தை தடுக்கும் கருவியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ஆராய்ந்தேன். அதன் விளைவாக இறுதியாண்டில் இக்கருவியை கண்டறிந்தேன். காரின் இருபக்க கண்ணாடியிலும் ஜூம் லென்சுடன் கூடிய நவீன காமிரா பொருத்தப்பட்டு, காரின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். அதை காருக்குள் உள்ள எல்இடி டிஸ்ப்ளேயில் பார்த்துக் கொண்டே காரை ஓட்டலாம். இதனால் சிறந்த முறையில் காரை விபத்தில்லாமல் பாதுகாப்பாக ஓட்ட முடியும். மேலும், இதில் உள்ள பிரத்யேக சாப்ட்வேர் துணையுடன் தொடர்ந்து 60 நாட்கள் நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.
விபத்தை தடுக்க மட்டுமன்றி, கொலை மற்றும் கொலை முயற்சி நடந்த பிறகு அந்த நிகழ்வுகளையும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென தனி பாஸ்வேர்டு இருப்பதால் காரின் உரிமையாளர் தவிர மற்றவர்கள் இதனை அறிய முடியாது. அறுபது நாட்களுக்கு பிறகு பென்டிரைவிலோ அல்லது சி.டி.யிலோ அந்த நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
முக்கிய பிரமுகர்கள், காவல்துறை உட்பட அனைவருக்கும் இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் கடினமாக உழைத்து, ஸீ45 ஆயிரம் செலவில் இந்த கருவியை கண்டு பிடித்துள்ளேன். விரைவில் இக்கருவிக்காக காப்புரிமை பெற இருக்கிறேன். இவ்வாறு நாகராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...