உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

சமையல் காஸ் சிலிண்டர் எடை சரியாக இருக்கிறதா?

திருப்பூர் : திருப்பூர் பகுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர்கள் முறைகேடாக விற்பனை செய்வது மற்றும் எடை குறைவாக வினியோகம் செய்வது போன்ற விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, எடையை சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள்.திருப்பூர் நகர பகுதியில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் 1.5 லட்சம் சமையல் காஸ் இணைப்பு கள் உள்ளன. சமையல் காஸ் இணைப்பு பெற்றவர்கள், பதிவு செய்ததும், 25 நாட்களில் சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும் என காஸ் சிலிண்டர் வினியோக நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், 45 நாட்களுக்கு பிறகே சப்ளை செய்யும் நிலை உள்ளது.சிலிண்டர் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் சிலர் முறைகேடு செய்து, அவற்றை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். வாகனங்களில் எரிபொருளாகவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தற் போது எடை குறைவாகவும் சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.சில ஊழியர்கள், பொதுமக்களுக்கு வினியோகிக்கும் காஸ் சிலிண்டர்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் ஒரு கிலோ, இரண்டு கிலோ காஸ் எடுத்து, வணிக உபயோக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மாற்றம் செய்து விடுகின்றனர்.வாகனங்களுக்கு காஸ் மாற்ற பயன்பட்டு வந்த இயந்திரம், தற்போது, சிலிண்டர்களில் இருந்து சிலிண்டருக்கு மாற்றும் பணிக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக , நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் இவ்வாறு சிலிண் டர்களிலிருந்து காஸ் திருடும் செயல்கள் அரங்கேறி வருகின்றன.சிலிண்டரின் எடை, காஸ் எடை குறித்து அந்த சிலிண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். வீட்டு உபயோக சிலிண்டர்களில் 14.2 கிலோ காஸ் இருக்க வேண்டும். ஆனால், சப்ளை செய்யப்படும் காஸ் சிலிண்டர்களில் எடை குறைந்து காணப்படுகிறது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு வரும் சிலிண்டர், ஒரு வாரத்துக்கு முன்பே தீர்ந்து விடுகிறது என பெண்கள் புலம்பி, அதிகமாக பயன்படுத்தி விட்டோம் என ஆறுதல் படுகின்றனர். ஆனால், சமீபகாலமாக முறைகேடாக காஸ் திருடுவதும் ஒரு காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மானியம் காரணமாக, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 395.55 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ காஸ் விலை 27.85 ரூபாயாக உள்ளது. அதே நிறுவனங்களில், வணிக உபயோக சிலிண்டர்கள் 19 கிலோ 1,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மானியம் இல்லாத வணிக உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ காஸ் 73.68 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் வரை லாபம் கிடைப்பதால், வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து, வணிக உபயோக சிலிண்டருக்கு காஸ் மாற்றி, முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான சிலிண்டர்களில், சில ஆயிரம் சிலிண்டர்களில் காஸ் திருடி, உபயோகிப்பாளர்களை ஏமாற்றும் நிலை தொடர்கிறது. காஸ் நிறுவனங்களை பொறுத்தவரை, அனைத்தும் "கம்யூட்டரைஸ்டு பில்லிங்' என்பதால், தவறு நேர வாய்ப்பில்லை; சப்ளை செய்பவர்கள் தங்களுடன் எடை கருவி கொண்டு வந்து, சிலிண்டரில் குறிப்பிட்டுள்ள அளவு காஸ் உள்ளதா; "சீல்' சரியாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் என கூறுகின்றன. எனவே, பொதுமக்கள் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது, சரியான எடையில் சிலிண்டர் உள்ளதா என்பதை உறுதி செய்ய, எடை போட்டு வாங்கினால், ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். டயல் செய்யுங்க, போதும் : பாரத் காஸ் வினியோகஸ்தரான, "கவுரி துர்க்கா' காஸ் ஏஜன்சி உரிமையாளர் சாமுவேல் கூறியதாவது: காஸ் சிலிண்டர்களில் "சீல்' உடைக்காமல் வினியோகிக்கப்படுகிறது. குளிர்காலம் என்பதால், பொருட்கள் சூடாவதற்கு எல்.பி.ஜி., பயன்பாடு கொஞ்சம் அதிகரித்திருக்கும். அதனால், குறைந்த நாட்களுக்கு பயன்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள், டெலிவரி ஊழியர்களிடம் சிலிண்டர் வாங்கும்போது, "சீல்' உடைக்காமல் உள்ளதா என்பதையும், அவர்கள் கொண்டு வரும் தராசில் எடை போட்டு சரியான எடை உள்ளதா என்பதையும் உறுதி செய்து டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து புகார் இருந்தால், 98430-43623 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...