உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

திருப்பூரில் "ஒயிட்னர்' போதையால் சீரழியும் சிறுவர் சமுதாயம்

 
பேப்பர்களில் எழுத்துக்களை அழிக்க உதவும் "ஒயிட்னர்' எனும் வேதிப்பொருளை, போதைக்காக பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை, திருப்பூரில் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாவதோடு, எதிர்காலத்தில் குற்றச்சமூகம் உருவாகும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
திருப்பூர், தொழில் துறையில் அபார வளர்ச்சி கண்டிருந்தாலும், ஒருபுறம் சமூக சூழ்நிலைகள் மாறுதல், குற்றச்செயல்கள், போதைக்கு அடிமை என மனித வளத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடும்போது, திருப்பூரில் "டாஸ்மாக்' மதுக்கடைகள் அதிகளவு உள்ளதோடு, எந்நேரமும் பிசியாக
இருக்கும் நிலையை காண முடிகிறது. அதேபோல், தற்கொலை, கள்ளத்
தொடர்பு, திருட்டு, வழிப்பறி, வாகன திருட்டு, கொலை, விபத்துக்கள் என ஒருபுறம் சட்டம் மற்றும் சமூகம், கலாசாரத்துக்கு புறம்பான செயல்களும் அதிகரித்து வருகின்றன.
தொழிலாளர்கள், இளைஞர்கள், 
மது, கஞ்சா போதைக்கும் அடிமையாகி, குடும்ப சீரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்களும் ஒருவித போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். திருப்பூரில், 20க்கும் மேற்பட்ட, ஏழை மக்கள் வசிக்கும் குடிசை பகுதிகள் உள்ளன. பல ஆயிரக்
கணக்கான குடும்பங்கள் இவ்வாறு உள்ள நிலையில், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாகவும், குப்பைகள் பொறுக்கும் தொழிலும், ஓட்டல், டீக்கடை, கம்பெனிகளில் வேலைக்கு சென்று, பொருள் ஈட்டி வரும் வேதனையான நிலை உள்ளது.
குடும்பத்தின் ஏழ்மை, இலவசமாக கிடைக்கும் கல்வியை கூட பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆகிய காரணங்களால் பள்ளியை எட்டிப்பார்க்காமல், உடுத்த நல்ல உடை
கூட கிடைக்காமல், நூற்றுக்கணக்கான
சிறுவர்கள், திருப்பூரில் உலா வரும் அவல நிலையை காண முடிகிறது. இச்சிறுவர்கள், சிறு வயதிலேயே ஒருவித போதைக்கு அடிமையாகி, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதும், சிறு, சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்
களும் அதிகரித்து வருகின்றன.
"ஒயிட்னர்' என்னும் போதை: பேப்பர்களில் உள்ள எழுத்துக்களை அழிக்க, "ஒயிட்னர்' பயன்படுகிறது. இதில் இருக்கும் "டியூலின்' என்ற வேதிப்பொருள் ஆல்கஹாலைவிட, மோசமானது. இதை, துணியில் தேய்த்து, மூக்கில் நுகர்ந்தால் போதை தலைக்கேறி விடும். நான்கு மணி நேரம், ஒருவித போதை மதப்பை இது தருகிறது. இதை சேரி குழந்தைகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆபத்தை உணராமல் பயன்படுத்தி வருவதோடு, தங்கள் வயதை ஒத்த குழந்தைகளுக்கும் பழகி கொடுக்கின்றனர். "ஒயிட்னர்' பயன்படுத்தும் ஏழை குழந்தைகள் திருப்பூரில் அதிகளவில் உள்ளனர்.
பெட்ரோலும் போதையா?
"ஒயிட்னர்' மட்டுமன்றி, சிறுவர்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றையும் போதைக்காக பயன்படுத்துகின்றனர். வாகனங்களில் பெட்ரோல் டேங்க்கை திறக்கும் சிறுவர்கள், அதில் மூக்கை வைத்து நுகர்கின்றனர். இதிலும், ஒருவித போதை ஏற்படுவதை உணர்கின்றனர். இரவு நேரங்களில், ரோடுகள், வீட்டுக்கு வெளியே நிற்கும் வாகனங்களில் "டேங்க்'குகள் இவ்வாறு திறக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஏழை மக்கள் வசிக்கும் குடிசை பகுதி சிறுவர்களிடம் வேகமாக பரவி வரும் இக்கலாசாரம், சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
எளிதாக அனைத்து கடைகளிலும் "ஒயிட்னர்' கிடைக்கிறது; அதில், "குழந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது,' என, எச்சரிக்கை அறிவிப்பு ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழே படிக்க தெரியாத சிறுவர்களுக்கு, ஆங்கிலத்தில் உள்ளது புரிவதில்லை.
வியாபாரம் என்ற நோக்கில் கடைக்காரர்களும், சிறுவர்களுக்கு "ஒயிட்னர்' விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூரில் கடை
களில் "ஒயிட்னர்' விற்பனை குறித்து
விரிவான ஆய்வு செய்தாலே, எதற்கு இது பயன்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவரும்.
எதிர்கால சமுதாயத்துக்கு
அச்சுறுத்தல்: ஐந்து வயதிலேயே, ஒருவித போதைக்கு அடிமையாகும் இச்சிறுவர்கள், "ஒயிட்னர்' வாங்க தேவையான 30 ரூபாயை திரட்டுவதற்கு எந்த செயலையும் செய்ய துணிகின்றனர். சிறு, சிறு பொருட்களை திருடி விற்பது, பிச்சை எடுப்பது என நிலை தடுமாறுகின்றனர்.
சிறு வயதில் இவ்வாறு தடம்
மாறும் சிறுவர் சமுதாயம், வளரும்போது, மற்ற போதைகளுக்கும் அடிமையாகி, போதைக்கு அடிமையான ஒரு சமுதாயம் உருவாகும் அபாயம் உள்ளது; குற்றச்செயல்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உடல் நலத்துக்கு கேடு: ஒயிட்னரில் உள்ள "டியூலின்' எனப்படும் வேதிப்பொருளை சுவாசிக்கும்போது, மூச்சுக்குழாய், மூளை கடுமையாக பாதிக்கும். மேலும், குடல், கல்லீரல், கண்கள் என அனைத்து உறுப்புகளும் இந்த வேதிப்பொருளால் பாதித்து, கடும் பின்விளைவுகளை ஏற்
படுத்தும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பலர், அந்த போதைக்கு அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
என்ன செய்ய வேண்டும்? திருப்பூரில் உள்ள குடிசை பகுதிகள் குறித்து முழுமையான விவரங்களை சேகரித்து, அங்குள்ள குழந்தைகள் என்ன செய்து வருகின்றனர் என்ற பட்டியல் தயாரிக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல், குப்பை பொறுக்குவது, வேலைக்குச் செல்வது போன்ற குழந்தை தொழிலாளர்களாக உள்ளவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இவர்களுக்கு என தனியாக பள்ளிகள் துவங்குவதோடு, அவர்களில், "ஒயிட்னர்' உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து இவர்களை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகளிலும் இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும்,
ஆசிரியர்கள் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.
பெற்றோர்களுக்கும் இதுகுறித்த ஆபத்தை உணர வைக்க வேண்டும். குடிசை பகுதிகளில் சமுதாய, பொருளாதார மேம்பாட்டு பணியை தீவிரப்படுத்த வேண்டும். கடைகளில் "ஒயிட்னர்' விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.
சமூக நலத்துறை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நிறுவனம், மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறை, போலீஸ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன், தொண்டு நிறுவனங்களையும் இப்பணியில் இணைத்து சிறுவர் போதை கலாசாரத்தை ஒழிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால சமுதாயத்தை குற்றமில்லா, நல்ல சமுதாயமாக மாற்ற, வழக்கமான அரசு பணி போல் கருதாமல் சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே, சமுதாயத்தை மீட்க முடியும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...