உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, January 04, 2012

நண்பர்களே கொஞ்சம் உஷார்

கருவேலம் மரங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள், கருவுடை மரம் என்று எங்கள் பகுதியில் சொல்லுவார்கள். பெருந்தலைவர் காமராசர் புண்ணியத்தில் ஹெலிக்காப்டர் மூலம் இவ்விதை தூவப்பட்டது. அப்போதே இதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடுமையான எதிர்ப்புக்கு சொல்லப்பட்ட காரணங்கள்..


நிலத்தை பாழ்படுத்தி விடும்.

தண்ணீர் உற்றத்தேவை இல்லாத இம்மரங்கள், நிலத்தடி நீரை 10 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கிருந்தாலும் உரிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

மற்ற மரங்களைப் போல அல்லாமல், இலைகளின் வழியே காற்றில் உள்ள ஈரபதத்தையும் இம்மரம் உரிஞ்சி விடும் என்பதால்.. அப்பகுதியில் எப்போதும் வெப்பம் மிகுதியாகவே இருக்கும்.

கடல் சூழ்ந்த ராமேஸ்வரம் பகுதிலும், இப்படியான வெப்பக்காற்றை அனுபவிக்க முடியும். அதற்கு காரணம் இக்கருவேல மரங்கள் என்று சொல்லப்படுகிறது.

இதெல்லாம் இப்ப எதற்கு என்பவர்களுக்கு, அரசு திட்டம் பற்றிய கீழ்கண்ட செய்தியை வாசிக்க சிபாரிசு செய்கிறேன். 

பத்திரிக்கை செய்தி கீழே!

// 

6,000 ஹெக்டேரில் கருவேலம் நடவு : தமிழக அரசு ரூ.15 கோடி ஒதுக்கீடு

சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், கண்மாய்களில், 6,000 ஹெக்டேர் பரப்பில் கருவேலம் மரங்களை நட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 1980ல், சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், ஏரி கரைகளில் நாட்டுக் கருவேலம் மரங்களை நட அரசு நடவடிக்கை எடுத்தது.
இத்திட்டத்தால் மாநிலம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கரில், வனத்துறையினரால் கருவேலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. வறட்சியை தாங்கி, இத்தகைய மரங்கள் வளரும். குத்தகை மூலம் அவை விறகாக விற்பனை செய்வதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைத்தது. அதன்பின், இத்திட்டம் செயல்பாட்டில் இருந்து மறைந்தது.
தற்போது, கண்மாய்களுக்குள் மீண்டும் கருவேலம் மரக்கன்றுகளை நட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டிலேயே, 6,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு கருவேலம் மரங்களை நடவும், இத்திட்டத்துக்காக, 15 கோடி ரூபாயை ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஐந்தாண்டுக்குள் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கருவேலம் மரங்களை நட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாயை ஈட்டித் தர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண் கூறியதாவது: சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், தண்ணீர் இல்லாத குளத்திலும், பெரிய ஏரிகளின் கரைகளிலும் கருவேலம் மரங்கள் நடப்பட்டு, நன்கு வளர்ந்த பின், அவை விறகுக்காக விற்பனை செய்யப்படும். இதன் மூலம், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்தது. 10 ஆண்டாக கிடப்பில் இருந்த இத்திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அமல்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.//
நன்றி Bala Bharathi

https://plus.google.com/u/0/109746227310987865889

1 comment:

  1. இது சரியான தகவலா. கருவேலமரங்கள் யூக்கலிப்டஸ் மரஙலைப் போலவோ சீமை முள் வேலி மரஙளைப் போலவோ கெடுதலானது அல்ல என்றே தெரிகிறது. எங்களூர்ப் பகுதியில் நிரைய க்ருவேல மரஙகள் இருந்தும் மழை நன்றாகவே பெய்தது. சரியாக கவனித்து கருத்து கூறுங்கள்.
    ராரா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...