உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

தனியார் செவிலியர்கள், அரசு செவிலியர்கள் போட்டி போட்டு போராட்டம் ?

தனியார் கல்லூரிகளில் படித்து, தற்போது அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் செவிலியர்கள், அரசு உத்தரவுக்கு ஆதரவாக நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலமாகச் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயை சந்தித்து, தங்களுக்கு அரசு பணி கிடைக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர். பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள், அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர்.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பட்டதாரி செவிலியர் சங்கத் தலைவர் பிரேம்குமார் கூறியதாவது:அரசு செவிலியர் பள்ளிகளில் படித்த மாணவியருக்கு, 2010 ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எங்களை பொறுத்தவரை 1983ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒருவருக்கு கூட அரசு பணி கிடைக்கவில்லை. மருத்துவ பல்கலைக்கழக பாடத் திட்டத்தைதான் நாங்கள் படிக்கிறோம். பல்கலைக்கழக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். எனவே, அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்ய எங்களுக்கு முழு தகுதி உள்ளது. தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்த 1.5 லட்சம் மாணவ, மாணவியர் வேலை இல்லாமல் உள்ளனர். தனியார் செவிலியர் பள்ளிகளில் படித்த, 1 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். 25 ஆண்டுகால போராட்டத்துக்கு இப்போதுதான் விடிவு பிறந்துள்ளது.இவ்வாறு பிரேம்குமார் கூறினார்.அரசு செவிலியர்கள் மாணவியர் போராட்டம்:


அரசு செவிலியர்கள் மெரீனா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே கூடி 500க்கும் மேற்பட்ட மாணவியர் உண்ணாவிரதம் இருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து, கலைந்து செல்லுமாறு போலீசார் அவர்களை எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

மயக்கம்:இதையடுத்து போலீசார், செவிலிய மாணவர்களையும், மாணவியரையும் குண்டுக்கட்டாக தூக்கி, போலீஸ் வேனில் ஏற்றினர். நீண்ட நேரம் வெயிலில் உண்ணாவிரதம் இருந்ததால், 10க்கும் மேற்பட்ட மாணவியர் மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்த மாணவியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 15 முதல் 30 நிமிடங்கள் வரை மாணவியர் சிலர் சுயநினைவின்றி கிடந்தனர். பின் ஆம்புலன்ஸ் வந்தது. இருப்பினும் ஒரே ஆம்புலன்சில் 3, 4 பேர் வரை ஏற்றி அனுப்பினர்.


வலிப்பு:ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால், ஒரு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சிலர், அந்த மாணவிக்கு முதலுதவி செய்தனர். பின்னர் அந்த மாணவியும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவ, மாணவியர் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். "கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்' என, மாணவர் விஜய் தெரிவித்தார்.

பணிகள் பாதிப்பு:அரசு செவிலியர் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், செவிலியர்களுக்கு உதவியாக வார்டுகளில் பணி செய்வார்கள். இந்த போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் உதவியாளர் பணிகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...