உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 19, 2012

அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களில் ரெய்டு

அணு உலை எதிர்ப்பாளர்களுடன் 
தொடர்புடைய தொண்டு நிறுவனங்களில், இரண்டாம் நாளாக நேற்றும், ரெய்டு 
தொடர்ந்தது. வெளிநாட்டு பணத்திற்கு 
முறையான ஆவணங்கள் தராததால், 
விசாரணை தொடர்வதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரெய்டு, 
இன்றும் தொடர்கிறது.

புகார் : கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, உதயகுமார் என்பவர் தலைமையில், ஒரு 
குழு போராட்டம் நடத்துகிறது; கடந்த நான்கு மாதங்களாக, தொடர் போராட்டம் நடக்கிறது. போராட்டத்திற்கு, வெளிநாட்டு சக்திகள் 
துணை போவதாக, புகார்கள் எழுந்தன. வெளிநாட்டிலிருந்து அவர்களுக்கு பணம் வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் கூறியிருந்தார். இந்நிலையில், அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் குறித்து, மத்திய உள்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர், இவான் அம்ப்ரோஸ் தலைமையில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், விசாரணை நடந்தது.
தூத்துக்குடியில், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி, மக்கள் கரங்கள், கடலோர மக்கள் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் செயல்படுவதை, உள்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில், சில நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து, 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததாக, உள்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், தொண்டு நிறுவனங்களில் விசாரணை நடத்த, மத்திய உள்துறை மற்றும் நிதித் துறை அதிகாரிகள், கடந்த, 10ம் தேதி, தூத்துக்குடி வந்தனர். ஒரு வாரமாக, தொண்டு நிறுவன நடவடிக்கைகளை, கியூ பிரிவு போலீசார் உதவியுடன், ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து, இரவு வரை, இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவன ஊழியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்; நேற்றும் விசாரணை தொடர்ந்தது.

சரியான ஆவணங்கள் தரவில்லை : இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: எங்களுக்கு வந்த புகார்களின் படி, நன்கொடை என்ற பெயரில், வெளிநாட்டு பணத்தைப் பெற்று, அதன்மூலம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். 
ஆயர் இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடம், அவர்களுக்கு வந்த பணத்தை, செலவு செய்ததற்குரிய முறையான ஆதாரங்களை கேட்டுள்ளோம். அவர்களால், சரியான ஆவணங்கள் இதுவரை தர முடியவில்லை. அதனால், விசாரணை தொடர்கிறது. ஆதாரம் கொடுத்தால், உடனடியாக விசாரணை முடிக்கப்படும்; இல்லையெனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். விசாரணை விவரங்களை, ஒரு வாரத்திற்குள், மத்திய அரசுக்கு அறிக்கையாக தருவோம். அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி, தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நடவடிக்கை : "ரெய்டு' குறித்து, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, "உள்துறைக்கு வந்த புகார்களின் படி, அந்தத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்வர். பின்னர் நடவடிக்கை இருக்கும்' என்றார்.

அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறப்படவில்லை : தூத்துக்குடி ஆயர் விளக்கம் : "" கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை,''என, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். அவரது விளக்க அறிக்கை: கடந்த, 2011, நவம்பரில், மத்திய உள்துறை அமைச்சகம், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்புகள், கடந்த ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதி சம்மந்தமாக எழுப்பிய, 32 கேள்விகளுக்கு, டிசம்பர் 2, 2011க்குள் பதில் அனுப்ப கேட்டுக் கொண்டது. முறைப்படியாக அவைகள் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, இம்மாதம், 10ம் தேதி முதல், 13ம் தேதிவரை, மறைமாவட்ட அலுவலகத்திலும், 16ம் தேதி முதல், 19ம்தேதி வரை, தூத்துக்குடி சமூகசேவை அலுவலகத்திலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இருவர், களஆய்வு மேற்கொள்வதாக முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு, தற்போது அது முறையாக நடந்து கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து பிற திட்டங்களுக்காக பெறப்பட்ட எந்த நிதியும், கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக பயன்படுத்தப் படவில்லை என்பதை, நாட்டுமக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய, விஷம பிரசாரத்தில் ஈடுபடுகிற செய்தித்தாள்களையும், தொலைக்காட்சி ஊடகங்களையும், தனிநபர்களையும், இயக்கங்களையும் வன்மையாக கண்டிப்பதோடு, அனைத்தையும் சட்டப்பூர்வமாக சந்திக்க நான் தயாராக உள்ளேன் . கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம், முழுக்க முழுக்க மக்களே முன்நின்று எடுத்து நடத்தும் போராட்டம். அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை அவர்களே உருவாக்கி கண்காணித்து நடத்துகின்றனர் என்பதையும், மீண்டும் அனைவருக்கும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனம் சார்பில், வெளிநாட்டு நிதியுதவியில், தாளமுத்து நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு, கழிவறை கட்டி கொடுத்துள்ளதாக, கணக்கு காட்டியுள்ளனர். அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரித்தனர். இதேபோல், முத்துக்குவியல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு செய்த உதவிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...