உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 22, 2012

குடும்ப அட்டையை ஞாயிறுகளிலும் ரேஷன் கடைகளில் புதுப்பிக்கலாம்!

பொதுமக்களுக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், '2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி ஜனவரி மற்றும் பிப்ரவரி 2012 மாதங்களில் நடைபெற்று வருகிறது.

அரசுப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின் காரணமாக நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது குடும்ப அட்டைகளை  பணி நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும், எனவே தங்களுடைய  குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர். 

எனவே, அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு  அவர்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக, 22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும் பணியினை மேற்கொள்ள அனுமதித்தும், அதற்கு பதிலாக 23.1.2012, 30.1.2012, 6.2.2012 மற்றும் 13.2.2012 ஆகிய தேதிகளை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவித்தும் ஆணையிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...