உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

புது முறையில் பிஎஸ்என்எல் ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி ?


நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஒரே மாதிரியான முறையில் பணம் கட்டும் முறை அறிமுகப்படுத்தியதில் இருந்து வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் காத்திருந்து பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
அதனால் இந்த மாதத்திற்கான பணம் கட்டும் கடைசி தேதி பிப்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் செல்போன், தொலைபேசி வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர  கட்டணங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம், அலுவலகம் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக கட்டி வருகின்றனர். சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் மூலமாகவும்,  ஆன்லைன் மூலமாகவும் பணம் கட்டுகின்றனர்.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும்  தானியங்கி இயந்திரங்களில் காசோலைகளை செலுத்தி ரசீது பெறும் முறையும் இருக்கிறது. இப்படி கட்டணம் வசூலிக்கும் முறைக்கு 
பயன்படுத்தப்படும் மென்பொருள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அதனை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் நிர்வாகம் கடந்தஆண்டு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் எந்த இணைப்பகத்தின் எண்ணுக்கான கட்டணத்தை எந்த இடத்திலும் கட்டும் வசதியும் அறிமுகம் செய்ய முடிவு செய்தது.தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம் உள்ளிட்ட பல்வேறு தொலைத் தொடர்பு வட்டங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அழைப்பு விவர பதிவு (கால் டிடெய்ல் ரெக்கார்டு) எனும் புதிய முறைக்கு 
மாறியது. இதற்கென உள்ள இணையதளத்தில் பதிவு செய்துக் கொண்டு பணம் கட்டலாம். அழைப்பு விவரங்களை பார்க்கலாம். அதுமட்டுமின்றி எந்த தேதியிலும் சேவை, இணைப்புத் திட்டங்களை 
மாற்றிக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.  சென்னை தொலைபேசி  இந்த முறையில் கடந்த 23ம்  தேதி அறிமுகமானது. புதிய முறை என்பதால் கட்டணம் வசூலிப்பது மெதுவாக நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் பணம் கட்ட 20 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன. அதுவும் பணம் கட்ட கடைசிநாள்  என்பதால்  வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை. அம்பத்தூர், கோடம்பாக்கம், பூக்கடை, மாம்பலம் ஆகிய இடங்களில் இப்படி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அதனால் சில இடங்களில் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் தகராறு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னையால் ஏற்கனவே கடைசி தேதி ஜன.28ல் இருந்து  ஜன.30  வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இணையதளத்தில் பதிவு செய்வதிலும் பிரச்னை தொடர்வதால் பலரும் வாடிக்கையாளர் மையத் தை தேடி வருகின்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
இப்பிரச்னை தொடர்வதால் கட்டணம் கட்டுவதற்கான கடைசி நாள் பிப்.6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இப்பிரச்னை சரியாகிவிடும் என்று சென்னை தொலைபேசி  அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள்  அதற்கென உள்ள இணையதளத்தின் மூலமாக செலுத்தி வந்தனர். உதாரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை  உள்ளடக்கிய சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் http://billchn.bsnl.co.in என்ற இணையதளம் மூலமாக பணம் செலுத்தினர்.  இதர மாவட்டங்களை உள்ளடக்கிய  வாடிக்கையாளர்கள் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்திற்கென தனி இணையதளம் இருக்கிறது. இனி எல்லோரும் http://selfcare.sdc.bsnl.co.in  என்ற இணையதளம் மூலமாகதான் ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். முதலில் இந்த இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். இப்படி ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு கட்டணத்தில் ஒரு சதவீதம்
விலக்கு உண்டு.  இதே இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் தங்கள் இணைப்புக்கான அழைப்பு விவரங்களை பெறலாம். அதற்கு கட்டணம் ஏதுமில்லை.

இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...