உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமி உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேரிடம் வாழ்கிறார்


ராசிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியை சேர்ந்தவர் கார்வண்ணன். விவசாயி. இவரது மனைவி கமலம். இவர்களது மகள் கோகுலபிரியா(12), மகன் சுதீஷ்(5). சிறுமி கோகுலபிரியா, சம்பாபாளிபுததூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

மாலையில் பள்ளி முடிந்ததும், வாயிலில் காத்திருந்த தந்தையின் பைக்கில் கோகுலபிரியா ஏறினார். அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு பைக், கோகுலபிரியா இருந்த பைக்கின் மீது மோதியது. இதில் கோகுலபிரியாவுக்கு தலையில் அடிபட்டது. கதறி துடித்த தந்தை கார்வண்ணன், மகளை சேலம் 3 ரோட்டில் உள்ள நீரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்த்தார். 10 நாட்கள் சிகிச்சை அளித்தும், கோகுலபிரியாவுக்கு நினைவு திரும்பவில்லை.
பின்னர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், கோகுலபிரியாவின் மூளை செயல் இழந்து விட்டது‘ என்றனர்.

அவரது உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க பெற்றோர் முன்வந்தனர். கடந்த 13ம் தேதியன்று, டாக்டர் குழுவினர், கோகுலபிரியாவின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து 6 பேருக்கு பொருத்தினர். 14ம் தேதி கோகுலபிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

‘ஐஏஎஸ் படித்து மக்களுக்கு சேவை செய்வேன் என அடிக்கடி கூறி வந்தாள். ஆனால் விபத்தால் எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டாள். அவளது உடல் உறுப்புகள் மூலமாக 6 பேரிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்‘ என கோகுலபிரியாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...