உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி திட்டமிட்டபடி விரைவில் தொடங்கும் ?

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி திட்டமிட்டபடி விரைவில் தொடங்கும். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பை விட ஆதரவு அதிகமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். 
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சந்தித்து பேசினார். காலை 10.30 மணி முதல் பகல் 11.15 மணி வரை இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். 

பின்னர்  நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருக்கு பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினேன். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மின்சார உற்பத்தி திட்டமிட்டபடி விரைவில் தொடங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பை விட ஆதரவு அதிகமாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...