உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

எம்எல்ஏக்களுக்கு லேப்டாப்: முதல்வர் அறிவிப்பு

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமே மக்களாட்சி நடைபெறுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள கணினி புரட்சியின் மூலம் பல தகவல்களை  இருந்த இடத்திலிருந்து கணினியின் மூலம்  தெரிந்துக் கொண்டு, அவர்களின் பணி சிறக்க அவர்களுக்கு கணினி வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
எனவே முதல்வர் ஜெயலலிதா 11.08.2011 அன்று 2011-12 ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். மேலும் நடப்பாண்டில் சட்டமன்ற  உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி  1 கோடியே 75 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...