உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

ரேஷன் கார்டுகளை கடையில் பதியாதவர்களுக்கு, பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க முடிவு ?


ரேஷன் கார்டுகளை கடையில் பதியாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, கார்டுதாரர்கள் இல்லையெனில் அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகையை விட ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டு, மூன்று கார்டுகள் வைத்துள்ளனர். இதனால் உண்மையான கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை. இதையும், கடத்தலையும் தடுக்க, அடுத்தாண்டுமுதல் "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணியில், வழங்கல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தலைவர்கள், அல்லது உறுப்பினர்கள் அந்தந்த கடைகளுக்கு நேரடியாக சென்று கையெழுத்திட்டு கார்டை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு பிப்ரவரி வரை உள்ளது. ஆனால் பிப்ரவரி தொடக்கத்தில், மீதி உள்ள 40 சதவீத கார்டுகளை கணக்கெடுத்து அவர்களின் வீடுகளுக்கு சென்றும் கார்டுதாரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்தாலும் ரேஷன் கடையில் வந்து கண்டிப்பாக பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. சப்ளை நிறுத்தம் செய்யப்பட்ட கார்டுதாரர்கள், கார்டு பதிய வராத காரணத்தை முறையான ஆதாரங்களுடன் கூறாவிட்டால், நிரந்தரமாக ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...