உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, January 18, 2012

"டேங்கர்' லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி அபாயம் :காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

திருப்பூர் : "டேங்கர் லாரிகள் ஓடாத காரணத்தால், இதுவரை காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படவில்லை; என்றாலும்கூட, நான்கு நாட்களுக்கு பின், காஸ் நிரப்பு மையங்களில் கையிருப்பு குறையும்போது, பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,' என, காஸ் ஏஜன்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளுக்கு தினமும் 2,000க்கும் அதிகமான சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படு
கின்றன. கிணத்துக்கடவு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்கள் உள்ளன. "டேங்கர்' லாரிகள் மூலமாக வரும் காஸ், இங்கு இருப்பு வைக்கப்பட்டு, காலி சிலிண்டர்
களில் நிரப்பப்படுகின்றன.
கடந்த 13ம் தேதி முதல் "டேங்கர்' லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதனால், காஸ் நிரப்பு மையங்களுக்கு வரத்து நின்றுள்ளதால், சிலிண்டர் நிரப்பும் பணிகள் மந்தமாகியுள்ளன. தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க, காஸ் நிரப்புவது கட்டுப்படுத்தப்படுகிறது. காஸ் நிரப்பு மையங்களில், வேலை நிறுத்தம் துவங்கிய பிறகு, ஒருநாள் மட்டுமே காஸ் நிரப்பப்பட்டது. அதன் பின், பொங்கல் பண்டிகை காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று மாலையில் இருந்து சிலிண்டர்களில் காஸ் நிரப்புவது மெதுவாக துவங்கியுள்ளது.
காஸ் கொண்டு வரும் "டேங்கர்' 
லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அன்றாடம் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. போராட்டம் மேலும் தொடரும் பட்சத்தில், எவ்வாறு சமாளிப்பது என பொது
மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வழக்கமாக, காஸ் சிலிண்டர் "புக்' செய்தால் 15 நாட்களுக்குள் சிலிண்டர் 
வினியோகிக்கப்பட்டது. அறிவிப்பு ஏதும் இல்லாவிட்டாலும், காஸ் ஏஜன்சிகள், வினியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளன. இதனால், "புக்' செய்தபின், குறிப்பிட்ட நாளுக்கு பிறகே வினியோகிக்கப்
படுகிறது. திருப்பூருக்கான காஸ் நிரப்பு மையங்களில் போதுமான இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாமல், ஒரு வாரம் வரை சமாளிக்க முடியும் என காஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் எச்.பி., காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
திருப்பூரில், மொத்தமாக தினமும் 2,000க் கும் அதிகமான சிலிண்டர்கள் 
வினியோகிக்கப்படுகின்றன. பொங்கல் 
பண்டிகைக்கு பின், காஸ் நிரப்புவது துவங்கியுள்ளதால், சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காஸ் நிரப்பு மையம் மற்றும் அந்தந்த ஏஜன்சி இருப்பு மையங்களில் போதுமான இருப்புள்ளது.
வரும் இரண்டு அல்லது மூன்று 
நாட்களுக்கு எளிதாக சமாளிக்க முடியும். அதன்பின், காஸ் சிலிண்டர் வினியோகத்தில் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மங்களூரில் இருந்தும், கொச்சியில் இருந்தும் கஞ்சிக்கோட்டுக்கு "டிரக்' மூலமாக காஸ் எடுத்து வரப்படுகிறது. சிலிண்டர் லாரிகள் வழக்கம்போல் சிலிண்டர் எடுத்து வருகின்றன. உடனடியாக பிரச்னை 
ஏற்படவில்லை என்றாலும், காஸ் இருப்பு குறையும் போது, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
திடீரென பிரச்னை வராமல், சிலிண்டர் பிரச்னை மெதுவாக வெளியே தெரிய
வரும். எனவே, "டேங்கர்' லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
காஸ் ஏஜன்சிகள் கணக்குப்படி, 
இவ்வார இறுதி வரை பிரச்னை வெளியே தெரியாது. அடுத்த வாரத்தில் இருந்து சிலிண்டர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள் ளது. எனவே, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில்கொண்டு, போராட்டத்தை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க 
வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...