உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

தமிழக பக்தர்கள் அதிகளவில் வராததால், சபரிமலையின் வருமானம் குறைந்துள்ளது ?

‘‘முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாக தமிழக பக்தர்கள் அதிகளவில் வராததால், சபரிமலையின்  வருமானம் குறைந்துள்ளது’’ என்று தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளாவில் இருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர். இவர்களின் மூலமாகதான், சபரிமலை கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது.


இந்த முறை மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. அடுத்த ஒரு சில வாரங்கள் வரை, வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போதுதான், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை வெடித்தது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை சென்ற வாகனங்கள் கேரளாவில் தாக்கப்பட்டன. இதனால், தமிழக பக்தர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதி, தமிழ்நாட்டில் உள்ள ஐயப்பன் கோயில்களிலேயே விரதத்தை முடித்தனர்.

இதனால், சபரிமலையில் படிப்படியாக கூட்டம் குறைய தொடங்கியது. பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயில் வருமானமும் குறைந்தது. இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘முல்லைப் பெரியாறு பிரச்னையால் சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

கேரளாவில் நடந்த சில பிரச்னைகள் காரணமாக குமுளி, செங்கோட்டை, வாளையாறு வழியாக தமிழக பக்தர்கள் வர அச்சப்படுகின்றனர். பெரும்பாலான தமிழக பக்தர்கள், சுருளி, பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மாலையை கழற்றி விரதத்தை முடிக்கின்றனர். தமிழக பக்தர்கள் வருகை குறைந்ததால், இந்த சீசனில் சபரிமலை கோயிலின் வருமானமும் குறைந்துள்ளது’’ என்றார்..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...