உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 16, 2012

நான் படித்த பள்ளி மேடையில் பேசுவதை எண்ணி மகிழ்கிறேன்: மேயர் விசாலாட்சி நெகிழ்ச்சி

நான் படித்த பள்ளி மேடையில் பேசுவதை எண்ணி மகிழ்கிறேன்: 
 
 மேயர் விசாலாட்சி நெகிழ்ச்சி
திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 61-வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு மாநகர கல்விக்குழு தலைவர் பட்டு லிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி வரவேற்று பேசினார்.
விழாவில் திருப்பூர் மாநகர மேயர் விசாலாட்சி,துணை மேயர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்ஸ் சவுகத் அலி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் மேயர் விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-
மனிதனுக்கு கல்வி தான் உயர்ந்தது,சிறந்தது.மனிதனை வாழ வைப்பதும் கல்வி செல்வம் கொடுக்க கொடுக்க வளரும்.மொழியால், இனத்தால் சாதியால் தாழ்ந்தவராக இருந்தாலும் கல்வி அவரை உயர்த்திக்காட்டி விடும்.
இந்த பள்ளியில் நான் படித்த பசுமையான நாட்கள் மறக்க முடியாதவை.இதே பள்ளியில் படித்து விட்டு இதே பள்ளி மேடையில் மேயராக பேச வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். உங்களுக்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கு படித்து உயர்வடையுங்கள் என்றார்.
விழாவில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியை மேரி விமலாபாய் கவுரவிக்கப்பட்டார்.இதில் பெரிச்சிபாளையம் ராஜ்குமார், சந்திரகாந்த் தேசாய் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...